குடுகுடுப்பைகாரன் வேடத்தில் வந்து மரண பயம் காட்டி நகை கொள்ளை

Added : ஆக 26, 2022 | |
Advertisement
ஞானபாரதி,-குடுகுடுப்பை வேடமணிந்த ஒருவர், முதியவரின் குடும்பத்தினருக்கு மரண பயத்தை காண்பித்து, தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.பெங்களூரு, ஞானபாரதி அருகில் உள்ள கே.பி.எஸ்.சி., லே -அவுட்டில் குடும்பத்துடன் வசிப்பவர் வரதராஜு, 67; மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது.ஆகஸ்ட் 6ல், வரதராஜுவின் தந்தை

ஞானபாரதி,-குடுகுடுப்பை வேடமணிந்த ஒருவர், முதியவரின் குடும்பத்தினருக்கு மரண பயத்தை காண்பித்து, தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றார்.

பெங்களூரு, ஞானபாரதி அருகில் உள்ள கே.பி.எஸ்.சி., லே -அவுட்டில் குடும்பத்துடன் வசிப்பவர் வரதராஜு, 67; மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது.ஆகஸ்ட் 6ல், வரதராஜுவின் தந்தை காலமானார். வீட்டில் இறப்பு நடந்தால், 11 நாட்கள் வரை இரவு நேரத்தில், வீட்டு வாசலில் விளக்கேற்றி வைப்பது சம்பிரதாயம். இதன்படி குடும்பத்தினர், தினமும் விளக்கேற்றி வைத்து, துாங்க செல்வர்.ஆகஸ்ட் 13ல், அதிகாலை குடுகுடுப்பை வேடமணிந்த நபர் ஒருவர், வரதராஜு வீட்டின் அருகில் நடமாடினார்.

'இந்த வீட்டில் ஏற்கனவே, ஒரு இறப்பு நடந்துள்ளது. சில நாட்களில் மற்றொரு இறப்பு நடக்கும்' என கூறிச் சென்றார்.அதே நாள் காலை 9:30 மணியளவில், மீண்டும் வீட்டருகில் குடுகுடுப்பைக்காரன் வந்தார். அப்போது வரதராஜு கடைக்கு சென்றிருந்தார். அவரது மனைவி மட்டும் தனியாக இருந்தார். அவரிடம், 'நான் கூறிய ஆருடம், எப்போதும் பொய்யானதில்லை. உங்கள் வீட்டில் மேலும் இரண்டு இறப்புகள் நடக்கும். இதை தடுக்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும்' என்றார்.இதை கேட்டு பயந்த மனைவி, சிறப்பு பூஜை செய்ய சம்மதித்தார். பின் குடுகுடுப்பை வேடதாரி, 'என் நெற்றியில் உள்ள கறுப்பு பொட்டை பார்த்துக் கொண்டே இருங்கள்' என கூறி, வரதராஜு மனைவி கழுத்திலிருந்த, இரண்டு தங்கச் செயின், ஒரு தங்க மோதிரத்தை பெற்றுக் கொண்டார். பூஜைக்காக 5,000 ரூபாயும் பெற்றுக் கொண்டார்.'நாளை எங்கள் வீட்டில் சிறப்பு பூஜை செய்கிறேன்.

அதன்பின் மந்திரித்த பொருட்கள், தங்க நகைகளை திரும்ப கொடுக்கிறேன்' எனக் கூறி, தன் மொபைல் எண்ணை கொடுத்து சென்றார்.வரதராஜு வீட்டுக்கு வந்த பின், மனைவி நடந்ததைக் கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர், குடுகுடுப்பை வேடதாரிக்கு போன் செய்தார். ஆனால் அவர் எடுக்கவில்லை. அதன்பின் 'சுவிட்ச் ஆப்' ஆனது. தந்தையின் காரியங்கள் நடந்ததால், அது முடிந்த பின், போலீசாரிடம் வரதராஜு புகார் செய்தார். மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X