போலி பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து

Added : ஆக 26, 2022 | |
Advertisement
கிரிமினல் வழக்கு தொடர திட்டம்பெங்களூரு-தகுதியற்றவர்கள் பெற்றிருந்த, பி.பி.எல்., மற்றும் அந்த்யோதயா கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கார்டுகளால் கிடைத்த அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.பொய்யான ஆதாரங்கள் தாக்கல் செய்தோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், அரசு சலுகைகள் அனுபவித்தவர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.ஏழைகள்,



கிரிமினல் வழக்கு தொடர திட்டம்

பெங்களூரு-தகுதியற்றவர்கள் பெற்றிருந்த, பி.பி.எல்., மற்றும் அந்த்யோதயா கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கார்டுகளால் கிடைத்த அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.பொய்யான ஆதாரங்கள் தாக்கல் செய்தோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், அரசு சலுகைகள் அனுபவித்தவர்கள் நடுக்கத்தில் உள்ளனர்.ஏழைகள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, பி.பி.எல்., மற்றும் அந்த்யோதயா ரேஷன் கார்டுகளை, கர்நாடக அரசு வழங்கியுள்ளது. கிராமப்புறங்களில் 7 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலம்; நகர்ப்பகுதிகளில் 1,000 சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்பளவுள்ள சொந்த வீடு; ஆண்டுக்கு 1.20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் உள்ளோர்; கார் வைத்துள்ளோர்; ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி செலுத்துவோர் அரசு சலுகை பெற முடியாது.ஆனால், அரசு அதிகாரிகள், வருமான வரி செலுத்துவோர் உட்பட பலர் பொய்யான ஆவணங்கள் அளித்து, பி.பி.எல்., மற்றும் அந்த்யோதயா கார்டுகள் பெற்றுள்ளனர். இந்த கார்டுகள் வைத்துள்ளோருக்கு, ஆயுஷ்மான் பாரத் -ஆரோக்கிய கர்நாடகா திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை; அரசின் பல்வேறு குடியிருப்பு திட்டங்களில் வீட்டு வசதி; கங்கா கல்யாணா; வட்டியில்லா கடன் சலுகை, பாக்யலட்சுமி என, பல சலுகைகளை பெறலாம்.இதனால், அரசுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. உண்மையான ஏழைகளுக்கு சலுகைகள் கிடைப்பதில்லை. இதை தீவிரமாக கருதிய மாநில அரசு, தகுதியற்றவர்கள் பெற்றுள்ள கார்டுகளை கண்டுபிடித்து ரத்து செய்கிறது.இதுவரை 21 ஆயிரத்து 679 அந்த்யோதயா ரேஷன்கார்டுகள்; 3 லட்சத்து ௮,௩௪௫ பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் என 3 லட்சத்து 30 ஆயிரத்து 24 கார்டுகள் ரத்தானது. இவர்களுக்கு கிடைத்து வந்த சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.பொய்யான தகவல் தெரிவித்து, பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் பெற்றுள்ளவர்கள் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளது. கார்டுகள் பெற்றவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X