யானைகளுக்காக கரும்பு திருட்டு: வனத்துறை மீது விவசாயிகள் புகார்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
பெலகாவி,-சிறுத்தையை பிடிக்க வந்துள்ள யானைகளுக்காக, வனத்துறையினர், தோட்டத்தில் கரும்பு திருடுவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.பெலகாவி நகரின், கோல்ப் மைதானம் அருகில் மூன்று வாரங்களாக, சிறுத்தை நடமாடி மக்களை அச்சுறுத்துகிறது. கூண்டிலும் சிக்கவில்லை. எங்கு பதுங்கியுள்ளது என்பதே தெரியவில்லை. சிறுத்தையை பிடிக்க, ஷிவமொகாவின் சக்ரிபைலு வளர்ப்பு யானைகள்

பெலகாவி,-சிறுத்தையை பிடிக்க வந்துள்ள யானைகளுக்காக, வனத்துறையினர், தோட்டத்தில் கரும்பு திருடுவதாக, விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பெலகாவி நகரின், கோல்ப் மைதானம் அருகில் மூன்று வாரங்களாக, சிறுத்தை நடமாடி மக்களை அச்சுறுத்துகிறது. கூண்டிலும் சிக்கவில்லை. எங்கு பதுங்கியுள்ளது என்பதே தெரியவில்லை. சிறுத்தையை பிடிக்க, ஷிவமொகாவின் சக்ரிபைலு வளர்ப்பு யானைகள் முகாமிலிருந்து, 'அர்ஜுன், அலி' என்ற இரண்டு யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.இவற்றின் உதவியுடன், வனப்பகுதியில் சிறுத்தையை, வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

யானைகளின் தீவனத்துக்காக, கரும்பை விலைக்கு வாங்காத வனத்துறை ஊழியர்கள், விவசாயிகளின் நிலத்தில் கரும்புகளை திருடி செல்வதாக, தகவல் வெளியாகியுள்ளது.முதகா கிராமத்தின், விவசாயி ராஜு கனபர்கர் என்பவரின் நிலத்தில் நுழைந்து, 500 கிலோ கரும்பை வனத்துறையினர் வெட்டி சென்றுள்ளனர். நேற்று காலை விவசாயி நிலத்துக்கு வந்த போது, விஷயம் தெரிந்தது.கோபமடைந்த அவர், மற்ற கிராமத்தினரை திரட்டி, யானைகள் கட்டப்பட்டுள்ள மைதானத்துக்கு சென்று, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். முதலில் குற்றச்சாட்டை மறுத்த அவர்கள், அதன்பின் கரும்புக்கான தொகையை தருவதாக கூறி, விவசாயிகளை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X