ஷிவமொகாவில் நுழைய 2 ரவுடிகளுக்கு தடை

Added : ஆக 26, 2022 | |
Advertisement
ஷிவமொகா-விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாடும் வகையில் இரண்டு ரவுடிகள், ஷிவமொகாவுக்குள் நுழைய கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.ஷிவமொகாவில் பஜ்ரங்தள் தொண்டர் ஹர்ஷா கொலைக்கு பின், மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. சுதந்திர தினத்திலும் வீர் சாவர்க்கர் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஹிந்து பிரமுகர் பிரேம் சிங், கத்தியால் குத்தப்பட்டார்.இதையடுத்து,



ஷிவமொகா-விநாயகர் சதுர்த்தியை அமைதியாக கொண்டாடும் வகையில் இரண்டு ரவுடிகள், ஷிவமொகாவுக்குள் நுழைய கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.ஷிவமொகாவில் பஜ்ரங்தள் தொண்டர் ஹர்ஷா கொலைக்கு பின், மதக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. சுதந்திர தினத்திலும் வீர் சாவர்க்கர் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் ஹிந்து பிரமுகர் பிரேம் சிங், கத்தியால் குத்தப்பட்டார்.இதையடுத்து, ஷிவமொகா நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திலும் இது எதிரொலிக்கலாம் என கருதப்படுகிறது. எனவே சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் கொண்டாட, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில், போலீசார் சோதனை நடத்தி ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர். சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.இந்த வகையில், சமந்த நாயக், 28, சந்தீப் குமார், 29 ஆகிய இரண்டு ரவுடிகளுக்கும் போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அவர்கள், தங்கள் செயல்பாட்டை மாற்றவில்லை.இதனால், இருவரையும் எல்லை கடத்த, துணை மண்டல அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 'அடுத்த அறிவிப்பு வரும் வரை, இருவரும் ஷிவமொகாவுக்குள் நுழைய கூடாது' என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X