குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கொதிப்பு நெல் கொள்முதல் நிலையம் குறித்து வாக்குவாதம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:'நெல் கொள்முதல் நிலையம் குறித்து, எந்த ஒரு விவசாயியும் பேச வேண்டாம்' என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பேசியதால், விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில், நேற்று கலெக்டர் ஆர்த்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.காஞ்சிபுரம் வேளாண்இணை இயக்குனர் முனைவர்

காஞ்சிபுரம்:'நெல் கொள்முதல் நிலையம் குறித்து, எந்த ஒரு விவசாயியும் பேச வேண்டாம்' என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் பேசியதால், விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில், நேற்று கலெக்டர் ஆர்த்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.காஞ்சிபுரம் வேளாண்இணை இயக்குனர் முனைவர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குறைதீர் கூட்டத்தில் நடந்த விவாதம்:உத்திரமேரூர், விவசாயி: சென்னை உயர் நீதி மன்றம், 10 விதமான மரங்களை நடவு செய்யக்கூடாது என, உத்தரவு பிறப்பித்து உள்ளது. வனத்துறையினர் இது போன்ற மரங்களை உற்பத்தி செய்கின்றனர்.கரும்பு சாரு; மண்புழு உரம்; நாட்டு சக்கரை ஆகியவை தயாரித்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். எடையாம் பூதுாரில் ஹாலோ பிளாக் கல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.

காஞ்சிபுரம் விவசாயி: உழவர் ஆர்வலர் குழு அமைத்துள்ளோம். அதில், இருக்கும் உறுப்பினர் களுக்கு, கறவை மாடு, உள்ளிட்ட பலவித கடன் வசதி செய்து கொடுக்க வேண்டும்.வேளாண் இயக்குனர் முகமது ரபீக்: ஏற்கனவே, அந்த குழுவிற்கு மரச்செக்கு வழங்கி உள்ளோம். கறவை மாடு வழங்கும் திட்டம் நம்மிடம் இல்லை. கால்நடை துறைக்கு பரிந்துரை செய்யலாம்.

வாலாஜாபாத் விவசாயி: ஒரு ஏக்கருக்கு, 30 மூட்டை நெல் கொள்முதல் செய்கின்றனர். எங்களுக்கு,35 மூட்டை மகசூல் கிடைக்கிறது. மீதி இருக்கும் நெல்லுக்கு வேறு ஒருவர் அடங்கல் வாங்கி கொடுக்க வேண்டி உள்ளது. இது, முறைகேடு செய்யத் துாண்டும் விதமாக இருக்கிறது.ஆகையால், கூடுதல் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய நடடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் ஆர்த்தி: நெல் கொள்முதல் நிலையம் குறித்து, எந்த ஒரு விவசாயியும் பேச வேண்டாம்.கலெக்டர் நேர்முக உதவியாளர் கணேசன்: இது, அரசு நிர்ணயம் செய்தது. நாங்களும், கூடுதல் மூட்டை கொள் முதல் செய்ய வேண்டும் என, கேட்கிறோம்.

ஸ்ரீபெரும்புதுார், விவசாயி: நெல் கொள்முதல் நிலையம் குறித்து, ஏன் பேசவேண்டாம் என, கூறுகின்றீர்கள். விவசாயி கள் நலன் காக்கும் கூட்டத்தில் பேசாமல் வேறு எங்கு பேசமுடியும். வாரந்தோறும், ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம் உள்ளிட்ட பலவித முகாம் கள் நடத்துகிறீர்கள். இதேபோல், கிராமங் கள் தோறும் விவசாயிகள் நலன் தீர்வு கூட்டம் நடத்த வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X