கோவில்களில் ஆவணி அமாவாசை வழிபாடு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், நேற்று, ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு வெற்றிலை மற்றும் சந்தனம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி ஜோதி நகர் விசாலாட்சியம்மன்
கோவில்களில் ஆவணி அமாவாசை வழிபாடு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், நேற்று, ஆவணி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு வெற்றிலை மற்றும் சந்தனம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பொள்ளாச்சி ஜோதி நகர் விசாலாட்சியம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்கார, ஆதாரனை நடந்தது. டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், பக்த ஆஞ்சநேயருக்கு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார வழிபாடு நடந்தது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, பல மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். கோவிலில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன.

வால்பாறை
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், காலை, 7:00 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு, காசிவிஸ்வநாதருக்கு, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதேபோல், வால்பாறையிலுள்ள கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன.

உடுமலை
உடுமலை, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் பிரம்மா, சிவன், விஷ்ணு அருள்பாலித்தனர். திருப்பூர் மற்றும் பல்வேறு நகரங்களிலிருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.உடுமலை சுற்றியுள்ள கோவில்களில் நடந்த பூஜைகளில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X