சாம்ராஜ்பேட்டில் விநாயகர் சதுர்த்திஅனுமதி அளித்து ஐகோர்ட் அதிரடி

Added : ஆக 26, 2022 | |
Advertisement
பெங்களூரு-சாம்ராஜ்பேட் விளையாட்டு மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட, கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு சாம்ராஜ்பேட் விளையாட்டு மைதானம் வருவாய் துறைக்கு சொந்தமானது என மாநகராட்சி அறிவித்து இருந்தது.இதை எதிர்த்து வக்ப் போர்டு, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம்



பெங்களூரு-சாம்ராஜ்பேட் விளையாட்டு மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட, கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.பெங்களூரு சாம்ராஜ்பேட் விளையாட்டு மைதானம் வருவாய் துறைக்கு சொந்தமானது என மாநகராட்சி அறிவித்து இருந்தது.இதை எதிர்த்து வக்ப் போர்டு, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த சந்தன் கவுடர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி கூறுகையில், “இதை விளையாட்டு மைதானமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும்,” என கூறி, விசாரணையை அடுத்த மாதம் 23க்கு ஒத்தி வைத்தார்இதற்கிடையில், சாம்ராஜ்பேட் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தியை 11 நாள் கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும் என ஏழு ஹிந்து அமைப்பினரும்; சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி அளிக்க கூடாது என இரண்டு அமைப்பினரும் அரசிடம் மனு தாக்கல் செய்திருந்தனர். இது குறித்த அறிக்கையை மாநில அரசு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.இது தொடர்பான விசாரணை, நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆலோக் அராதே தலைமையில் நடந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், “மதம் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் அரசுக்கு அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 31 முதல் குறிப்பிட்ட நாட்களுக்கு விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளிக்கலாம்,” என, உத்தரவிட்டுள்ளார். இதனால் ஹிந்து அமைப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X