போக்குவரத்து போலீசாருக்குசிறப்பு மருத்துவ முகாம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
அம்பத்துார், ஆக. 27--போக்குவரத்து போலீசாருக்கான சிறப்பு மருத்துவ முகாமை, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்.சென்னை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரகத்தின் கீழ், ஆவடி, அம்பத்துார், கொரட்டூர் உள்ளிட்ட 25 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றின் எல்லைகளில், மூன்று போக்குவரத்து உதவி கமிஷனர், ஐந்து இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 390 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.பணிச்சுமை, அதிகபட்ச
போக்குவரத்து போலீசாருக்குசிறப்பு மருத்துவ முகாம்



அம்பத்துார், ஆக. 27--

போக்குவரத்து போலீசாருக்கான சிறப்பு மருத்துவ முகாமை, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் துவக்கி வைத்தார்.சென்னை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரகத்தின் கீழ், ஆவடி, அம்பத்துார், கொரட்டூர் உள்ளிட்ட 25 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. அவற்றின் எல்லைகளில், மூன்று போக்குவரத்து உதவி கமிஷனர், ஐந்து இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 390 போலீசார் பணியாற்றி வருகின்றனர்.பணிச்சுமை, அதிகபட்ச கனரக வாகன போக்குவரத்து, அவற்றின் புகை மற்றும் காற்று மாசு, அவ்வப்போது பெய்யும் மழை ஆகியவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால், போக்குவரத்து போலீசாரின் உடல்நலம் பாதிக்கிறது. இந்த நிலையில், அவர்களின் நலன் கருதி, நேற்று காலை அம்பத்துாரில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.அதை, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் துவக்கி வைத்தார். அதில், மருத்துவ குழுவினர் வாயிலாக 110 போலீசாருக்கு, முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X