வடிகால் பணிகளின் பரிதாப நிலைமழையால் வெளிச்சத்திற்கு வந்தது

Added : ஆக 26, 2022 | |
Advertisement
ஓட்டேரி, மழைநீர் வடிகால் பணிகளின் பரிதாப நிலை, ஒரு மணி நேர மழைக்கே வெளிச்சத்திற்கு வந்தது.சென்னை ஓட்டேரி, பெரம்பூர், புளியந்தோப்பு சுற்றுவட்டாரங்களில், நேற்று மதியம் 1:00 மணியளவில் பலத்த மழை பெய்தது. அதனால், பிரதான சாலை மற்றும் இணைப்பு சாலைகளில் மழை வெள்ளம் பாய்ந்ததால், 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. ஆட்டோ, இரு சக்கர வாகன ஓட்டிகள், தொடர்ந்து வாகனங்களை இயக்க
வடிகால் பணிகளின் பரிதாப நிலைமழையால் வெளிச்சத்திற்கு வந்தது



ஓட்டேரி, மழைநீர் வடிகால் பணிகளின் பரிதாப நிலை, ஒரு மணி நேர மழைக்கே வெளிச்சத்திற்கு வந்தது.சென்னை ஓட்டேரி, பெரம்பூர், புளியந்தோப்பு சுற்றுவட்டாரங்களில், நேற்று மதியம் 1:00 மணியளவில் பலத்த மழை பெய்தது. அதனால், பிரதான சாலை மற்றும் இணைப்பு சாலைகளில் மழை வெள்ளம் பாய்ந்ததால், 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. ஆட்டோ, இரு சக்கர வாகன ஓட்டிகள், தொடர்ந்து வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர்.இந்நிலையில், திரு.வி.க., நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு ஆடு இறைச்சிக்கூடம் முதல், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது.மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் கூட, தண்ணீர் வேகமாக வடிய வழியின்றி, சாலையில் தேங்கியதே போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு காரணம்.மேலும் சில இடங்களில், வடிகால் பணிகள் முடியாததால், அச்சத்தில் வாகன ஓட்டிகள், அந்த இடங்களை கடந்து செல்லாமல் வாகனங்களை நிறுத்தினர். ஒரு மணி நேர மழைக்கே மேற்கண்ட நிலை என்றால், ஓரிரு நாட்கள் பலத்த மழை நீடித்தால், வடசென்னை வழக்கம் போல் மழை வெள்ளத்தில் மூழ்கும்.இதனால், மழைநீர் வடிகால் திட்டப் பணிகள், மழை வெள்ள பாதிப்பை தவிர்த்து, பொதுமக்களுக்கு உதவாது என்பது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.பருவ மழைக்கு முன், அரைகுறையான வடிகால் இணைப்புகளை சீரமைத்து, மண் குவியல் உள்ளிட்ட அடைப்புகளை அகற்றி, சாலையில் பாயும் மழைநீர் வேகமாக வடிய, சென்னை மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X