மூதாட்டியிடம் நகை பறிப்பு: வாலிபர்களுக்கு போலீஸ் வலை

Added : ஆக 26, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை, மகாலிங்கபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.வால்பாறை மழுக்குப்பாறையை சேர்ந்த மணி என்பவரின் மனைவி பொன்கனி, 64. இவர், மகன் பால்துரை,41, உடன் காரில் பொள்ளாச்சி வந்துள்ளார். அப்போது கார் திடீரென பழுது ஏற்பட்டது.காரை பழுது நீக்கம் செய்ய ஒர்க்ஷாப்புக்கு சென்றுள்ளார். அப்போது, தனியாக நின்ற பொன்கனியிடம்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை, மகாலிங்கபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.வால்பாறை மழுக்குப்பாறையை சேர்ந்த மணி என்பவரின் மனைவி பொன்கனி, 64. இவர், மகன் பால்துரை,41, உடன் காரில் பொள்ளாச்சி வந்துள்ளார். அப்போது கார் திடீரென பழுது ஏற்பட்டது.காரை பழுது நீக்கம் செய்ய ஒர்க்ஷாப்புக்கு சென்றுள்ளார். அப்போது, தனியாக நின்ற பொன்கனியிடம், பைக்கில் வந்த இரு நபர்கள் பேச்சு கொடுத்துள்ளனர். மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மகாலிங்கபுரம் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த, ஐந்து பவுன் நகை பறித்துச் சென்ற நபர்களில் ஒருவர் ெஹல்மெட் அணிந்தும், மற்றொருவர் 'மாஸ்க்' அணிந்தும் இருந்தது தெரியவந்தது.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, மர்மநபர்களை தேடுகின்றனர். நகரப்பகுதியில் நடந்த இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X