கிக் பாக்சிங்: 200 சிறுவர்கள் பங்கேற்பு| Dinamalar

கிக் பாக்சிங்: 200 சிறுவர்கள் பங்கேற்பு

Added : ஆக 26, 2022 | |
சென்னை, சென்னையில் நடக்கும், மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 200 சிறுவர்கள் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கின.இதில், 15 - -16 வயதுடையோர் ஜூனியர் பிரிவிலும், 17 - 18 வயதுடையோர் இளையோர்
கிக் பாக்சிங்: 200 சிறுவர்கள் பங்கேற்பு

சென்னை, சென்னையில் நடக்கும், மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 200 சிறுவர்கள் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம் சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கின.இதில், 15 - -16 வயதுடையோர் ஜூனியர் பிரிவிலும், 17 - 18 வயதுடையோர் இளையோர் பிரிவிலும் 19 வயதுக்கு மேற்பட்டோர் சீனியர் பிரிவிலும் மோதுகின்றனர். இந்த போட்டியில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சேலம் உட்பட, 16 மாவட்டங்களில் இருந்து, 200 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.முன்னதாக, நேற்று முன்தினம் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.முதல் நாளான நேற்று, ஜூனியருக்கான போட்டியை லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி., மயில்வாகனம் துவக்கி வைத்தார். சென்னை மாவட்ட வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் அசத்தி வருகின்றனர். போட்டிகள் நாளை வரை தொடர்ந்து நடக்கின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X