அரைகுறை கால்வாய் பணி: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

Added : ஆக 26, 2022 | |
Advertisement
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அரை குறையாக விடப்பட்டுள்ள மழை நீர் கால்வாய் கட்டும் பணிகளை, விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.மேற்கு தாம்பரம், கடப்பேரி பகுதியில், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி அமைந்துள்ளது. அரசு ஆவணங்களின் படி, பொத்தேரி எனவும் இது அழைக்கப்படுகிறது.மொத்தம், 65 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த ஏரி, ஆக்கிரமிப்பில் சிக்கி, 40
அரைகுறை கால்வாய் பணி: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?


தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அரை குறையாக விடப்பட்டுள்ள மழை நீர் கால்வாய் கட்டும் பணிகளை, விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.மேற்கு தாம்பரம், கடப்பேரி பகுதியில், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி அமைந்துள்ளது. அரசு ஆவணங்களின் படி, பொத்தேரி எனவும் இது அழைக்கப்படுகிறது.மொத்தம், 65 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த ஏரி, ஆக்கிரமிப்பில் சிக்கி, 40 ஏக்கராக சுருங்கியது. 30 ஆண்டுகளுக்கும் மேல், கழிவு நீர் மற்றும் 'பிளாஸ்டிக்' குப்பை கலந்து, ஏரி தண்ணீரும், பச்சை நிறமாக மாறிவிட்டது.இதை சீரமைக்க, நம் நாளிதழில் வெளியான தொடர் செய்திகளால், தென் மண்டல பசுமை தீர்ப்பாயமும், புகாரை கையில் எடுத்து, வழக்கு பதிந்து விசாரித்தது. இதையடுத்து, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 5.05 கோடி ரூபாய் மதிப்பில், ஏரியை சுற்றிலும், 'கட் அண்ட் கவர்' கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கின.தாம்பரம் பேருந்து பணிமனை, தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாமோதரன் நகர் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட தெருக்களின் கழிவு நீர், ஏரிக்குள் உட்புகாத வகையில், இந்த கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டது.மொத்தம், 5,085 அடி நீளத்திற்கு கட்டப்படும் இக்கால்வாய், நீரோட்டத்திற்கான பாதுகாப்பு கருதி, இரண்டு அடுக்காக, உட்புறம், 4 அடி அகலம், 4 அடி உயரத்தில் கட்ட திட்டமிடப்பட்டது.இதன் மேல், கால்வாயின் வெளிப்புற பகுதி, 5 அடி உயரம், 4 அகலத்திலும், மழை காலங்களில் மழை நீர் தொடர்ந்து செல்லவும், கழிவு நீர் உட்புகாமல் தடுக்கவும், ஐந்து இடங்களில், 'ஷட்டர்'கள் அமைக்கவும், திட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஓராண்டிற்கு முன், பணிகள் துவங்கியபோது, ஆறு மாதங்களுக்குள் இப்பணிகளை முடித்து, கால்வாயை பாதாள சாக்கடை திட்டத்துடன் இணைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.ஆனால், தற்போது வரை, இப்பணிகள் முடிவடையாமல் உள்ளன.மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு தாம்பரம், ஜாகிர் உசேன் தெரு துவங்கி ரங்கநாதபுரம், நான்காவது குறுக்கு தெரு வழியாக, கட்டப்படும் கால்வாய், மாநகர பேருந்து பணிமனை பின்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளால் பணிகளை தொடர முடியாத சூழல் உள்ளதாக, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இக்கால்வாய் பணிகள் முடிந்தால் தான், ஏரிக்குள் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டு, ஏரியை துாய்மைப்படுத்தும் பணிகளை துவக்க முடியும் என்பதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, கடப்பேரி பசுமை பாதுகாப்பு நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X