கஞ்சா விற்பனைஒடிசா நபர்கள் கைது

Added : ஆக 26, 2022 | |
Advertisement
அம்பத்துார், சொகுசு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா நபர்களை போலீசார் கைது செய்தனர்.அம்பத்துார் சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே, நேற்று அதிகாலை அம்பத்துார் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை சோதனையிட்டனர். அதில், 20 கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக, காரில்

அம்பத்துார், சொகுசு கார் மற்றும் இரு சக்கர வாகனத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா நபர்களை போலீசார் கைது செய்தனர்.அம்பத்துார் சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே, நேற்று அதிகாலை அம்பத்துார் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த காரை சோதனையிட்டனர். அதில், 20 கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக, காரில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் மஹாபத்ரா, 42, நரசிங் ராவ், 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அதேபோல், அம்பத்துார் பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே, வாகன சோதனை நடந்தது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த, கொரட்டூர், பாரதி நகரைச் சேர்ந்த விஜயகுமார், 26, அறிவழகன் வசந்தன், 24, ஆகியோரிடம் சோதனையிட்ட போது, 6 கிலோ கஞ்சா சிக்கியது. நால்வரையும் கைது செய்த போலீசார், 26 கிலோ கஞ்சா, 'டொயோட்டா எட்டியோஸ்' ரக கார், 'டியோ' ரக இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னையில், கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருள் விற்போர் மற்றும் கடத்துவோரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் நேற்றுடன் ஏழு நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்றது தொடர்பாக, 31 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இவர்களிடம் இருந்து, 66 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X