வீட்டின் பூட்டுடைத்துநகை திருடியவர் கைது

Added : ஆக 26, 2022 | |
Advertisement
ஆவடி,வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியோரில், ஒருவர் சிக்கினார்.சென்னை, ஆவடி அடுத்த பட்டாபிராம், சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 38; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 15ம் தேதி, அவரது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, 16 சவரன் நகை திருடு போனது. இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், நேற்று மதியம் சேக்காடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில்

ஆவடி,வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியோரில், ஒருவர் சிக்கினார்.சென்னை, ஆவடி அடுத்த பட்டாபிராம், சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 38; தனியார் நிறுவன ஊழியர். கடந்த, 15ம் தேதி, அவரது வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, 16 சவரன் நகை திருடு போனது. இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், நேற்று மதியம் சேக்காடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மர்மநபரை பிடித்து விசாரித்தனர்.இதில், அவர் மதுரவாயல், அபிராமி நகரைச் சேர்ந்த சத்யா, 22, என்பது தெரிந்தது. மேலும், அவர் உட்பட மூவர், மேற்கண்ட வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது.அவரை கைது செய்த போலீசார், 7 சவரன் நகையை மீட்டனர். தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X