விளை நிலங்களில் மண் கொள்ளை ஜோர் :தடுத்து நிறுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
உடுமலை;அரசு பணிக்கு என அனுமதி பெற்று, மண் கொள்ளை நடந்து வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.உடுமலையில் நடந்த, கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:வாளவாடி,பெரும்பள்ளம் முதல் பாப்பனுாத்து வரை, நில அளவை செய்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, 4 மாதமாக இழுபறியாக உள்ளது.பி.ஏ.பி., உடுமலை கால்வாயில், அரசுக்கல்லுாரி முதல் வெஞ்சமடை வரை,

உடுமலை;அரசு பணிக்கு என அனுமதி பெற்று, மண் கொள்ளை நடந்து வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.உடுமலையில் நடந்த, கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:வாளவாடி,பெரும்பள்ளம் முதல் பாப்பனுாத்து வரை, நில அளவை செய்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, 4 மாதமாக இழுபறியாக உள்ளது.பி.ஏ.பி., உடுமலை கால்வாயில், அரசுக்கல்லுாரி முதல் வெஞ்சமடை வரை, கால்வாய் குப்பை, அசுத்தமான கழிவு கொட்டும் மையமாக மாறியுள்ளது.குடிநீர், விவசாயத்திற்கு பயன்படும் நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குப்பை கொட்டாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை கால்நடைத்துறை மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், பகலில் கூட டாக்டர்கள் இருப்பதில்லை.கால்நடைத்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, மாடுகளுக்கு தனியார் வாயிலாக, சினை ஊசி செலுத்த வேண்டியுள்ளது. தரமற்றதாக உள்ளதால், பல முறை செலுத்தி, அதிக இழப்பு ஏற்படுகிறது.உரங்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி, பல மடங்கு கூடுதலாக விற்கப்படுகிறது. பாசனம் துவங்க உள்ள நிலையில், பருவத்திற்கு ஏற்ற பயிர் சாகுபடி குறித்தும், தேவையான உரம், விதை, பூச்சி மருந்துகள் இருப்பையும், கூடுதல் விலைக்கு விற்பதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலையில், 35 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ளது. கொப்பரை கொள்முதலில், தனியார் நிறுவனங்கள் 'சிண்டிகேட்' காரணமாக, கடும் விலை வீழ்ச்சியும், உப பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளாலும், தேங்காய் விலையும் சரிந்து, ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.ஒரு கிலோ கொப்பரை 150 ரூபாய்க்கும், தேங்காய் நேரடியாகவும் கொள்முதல் செய்ய வேண்டும்.பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின், ஆதார், மொபைல் எண் இணைக்கவும், புதுப்பிக்கவும் சர்வர் பழுது காரணமாக முடியவில்லை. உரிய நடவடிக்கை வேண்டும்.விவசாய மின் இணைப்பு வழங்கும் போது, மின் இணைப்பு இல்லாத விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வி.ஏ.ஓ.,க்கள் கிராமங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.நான்கு வழிச்சாலைக்காக, மண் எடுக்கப்படுகிறது. அந்த பர்மிட்டை பயன்படுத்தி, தும்பலப்பட்டியில், தனியார் மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.மடத்துக்குளம் தாலுகாவில், ராமகேவுண்டன் புதுார், பணத்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிலச்சீர்திருத்த சட்ட நிலத்தில், 20 முதல் 30 அடி ஆழம் வரை மண் சுரண்டப்படுகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில், அரசு சிமெண்ட் கோரி, 50 மூட்டைக்கு, 9,500 ரூபாய் வங்கி டி.டி., அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. 3 ஆண்டுகளாகியும், இதுவரை சிமெண்ட் வழங்காததோடு, அதிகாரிகள் முறையான பதில் அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்; பலர் பாதித்துள்ளனர்.இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X