எழும்பூர் ரயில் நிலையத்தில்'எஸ்கலேட்டர்' பணி இழுவை

Added : ஆக 26, 2022 | |
Advertisement
சென்னை,எழும்பூர் ரயில் நிலையத்தில், அமைக்கப்பட்டும் வரும் 'எஸ்கலேட்டர்' என்னும் நகரும் படிக்கட்டு பணி இழுவையாக நடக்கிறது. இதனால் பயணியர் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் சென்னை, எழும்பூர் ரயில் நிலையமும் ஒன்று. இங்கிருந்து, தினமும் 35க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 240க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்களும்
எழும்பூர் ரயில் நிலையத்தில்'எஸ்கலேட்டர்' பணி இழுவை

சென்னை,எழும்பூர் ரயில் நிலையத்தில், அமைக்கப்பட்டும் வரும் 'எஸ்கலேட்டர்' என்னும் நகரும் படிக்கட்டு பணி இழுவையாக நடக்கிறது. இதனால் பயணியர் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் சென்னை, எழும்பூர் ரயில் நிலையமும் ஒன்று. இங்கிருந்து, தினமும் 35க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 240க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், போதிய அளவில் பயணியருக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணியர் அவதியடைந்து வருகின்றனர்.குறிப்பாக, நடைமேடை - 5 மற்றும் 6ல் அமைக்கப்பட்டும் வரும் 'எஸ்கலேட்டர்' பணிகள் இழுவையாக நடக்கின்றன.இது குறித்து பயணியர் சிலர் கூறியதாவது:எழும்பூர் ரயில் நிலையத்தில், பயணியர் வருகை அதிகரித்து வருகிறது. ஆனால், பேட்டரி கார், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. அதேபோல், நடைமேம்பாலம் பணிகளும், எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகளும் மெத்தனமாக நடக்கின்றன.ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் எஸ்கலேட்டர்களும் அடிக்கடி பழுதடைகின்றன. எனவே, எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X