நிலுவை வழக்குகள் மீது கவனம் செலுத்தவில்லை:தலைமை நீதிபதி வருத்தம்

Updated : ஆக 26, 2022 | Added : ஆக 26, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி-உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிடுவதில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போனது வருத்தத்தை அளிப்பதாக, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தன் பிரிவு உபசார உரையில் தெரிவித்தார்.உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்., 24ல் என்.வி.ரமணா பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. மனமார்ந்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிடுவதில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போனது வருத்தத்தை அளிப்பதாக, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தன் பிரிவு உபசார உரையில் தெரிவித்தார்.உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்., 24ல் என்.வி.ரமணா பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.



latest tamil news


மனமார்ந்த நன்றி

இதையடுத்து, நேற்று நடந்த பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:நீதித்துறையின் தேவைகள் மற்ற துறைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. வழக்கறிஞர்கள் சங்கம் தங்கள் முழு ஒத்துழைப்பை அளிக்காவிட்டால், நீதித்துறையில் தேவையான மாற்றங்களை உருவாக்குவது சிரமம்.நீதித்துறையில் தங்கள் பயணத்தை துவக்கும் இளைய தலைமுறையினர், மூத்தவர்களை தங்கள் முன்மாதிரியாக கருதுகின்றனர். அவர்களை சரியான பாதையில் நாம் தான் வழிநடத்த வேண்டும். நம் நீதித்துறை காலப்போக்கில் வளர்ந்து வருகிறது. ஒற்றை தீர்ப்பு அல்லது உத்தரவு வாயிலாக அதை வரையறுக்கவோ, தீர்மானிக்கவோ முடியாது.இத்துறையின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படவில்லை எனில், இந்த சமூகம் மற்றும் மக்களிடம் இருந்து நாம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது. சாமானிய மக்களுக்கு விரைவான மற்றும் நியாயமான தீர்ப்பை வழங்குவதை நோக்கி நாம் அனைவரும் முன்நகர வேண்டும். நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பை அளித்ததில் நான் முதல் ஆளோ, கடைசி ஆளோ அல்ல. எத்தனையோ பேர் வந்து போகலாம்; இந்த அமைப்பு மட்டுமே எப்போதும் நிரந்தரமானது; பணி காலத்தில் எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


மிகப்பெரிய சவால்

வழக்குகள் நிலுவையில் இருப்பது நம் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிடுவதில் என்னால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.இதற்கு தீர்வு காண நவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மற்ற துறைகளை போல, அதற்கான தொழில்நுட்பங்களை சந்தையில் இருந்து நேரடியாக நாங்கள் வாங்க முடியாது. அவற்றை பிரத்யேகமாக உருவாக்கும் முயற்சிகள் நடந்தும், பாதுகாப்பு காரணம் கருதி அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.



latest tamil news



கண்ணீர் சிந்திய மூத்த வக்கீல்!

தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பிரிவு உபசார விழாவில் பேசிய மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார். அவர் பேசியதாவது:நாட்டின் குடிமக்கள் சார்பில் நான் உரையாற்றுகிறேன். நீங்கள் எப்போதும் அவர்கள் பக்கம் நின்றீர்கள். அவர்களின் உரிமைகளை உறுதி செய்தீர்கள். எங்கள் எதிர்பார்ப்புகளை மிஞ்சியவராக இருந்தீர்கள். நீதித்துறை, அதிகாரிகள், பார்லிமென்ட் இடையே சமநிலையை காத்தீர்கள்.இவ்வாறு அவர் பேசினார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-202206:27:28 IST Report Abuse
அப்புசாமி நீதித்துறையின் மீது மக்களுக்கு ஏதோ பெருசா நம்பிக்கை இருக்கற மாரில்ல பேசுறாரு?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202204:55:52 IST Report Abuse
Mani . V ....... பதவியில் இருக்கும் பொழுது ஒன்றும் செய்வது இல்லை. போகும் பொழுது அடுத்தவர்கள் மீது சேற்றை அள்ளி வீசி விட்டு செல்ல வேண்டியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X