ரூ.20 கோடி 'ஆட்டை' போட்டமென்பொறியாளர் பிடிபட்டார்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
சேலையூர், காஞ்சிபுரம் நபர் உட்பட பலரிடம் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த மென்பொறியாளர், கோயம்புத்துாரில் கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சர்வபொம்மன், 25; பட்டய கணக்காளருக்கு படித்து வருகிறார்.இவரிடம், வேங்கைவாசல், மாம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேச பாலாஜி, 24, என்பவர், பட்டய கணக்காளர்

சேலையூர், காஞ்சிபுரம் நபர் உட்பட பலரிடம் 20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த மென்பொறியாளர், கோயம்புத்துாரில் கைது செய்யப்பட்டார்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சர்வபொம்மன், 25; பட்டய கணக்காளருக்கு படித்து வருகிறார்.இவரிடம், வேங்கைவாசல், மாம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேச பாலாஜி, 24, என்பவர், பட்டய கணக்காளர் படிப்பு முடித்து, பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பான தொழில் செய்து வருவதாக, கடந்தாண்டு அறிமுகமாகி உள்ளார்.மேலும், 'தன்னிடம் பணம் கொடுத்தால், பங்குச்சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கி கொடுப்பதாக' ஆசைவார்த்தை கூறியுள்ளார்.அவரை நம்பி சர்வபொம்மன், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பணம் கொடுத்துள்ளார். அதை பெற்ற பிரசன்ன வெங்கடேச பாலாஜி, பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.இது குறித்து, ஏப்., 3ம் தேதி, சர்வ பொம்மன் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.இதில், பிரசன்ன வெங்கடேச பாலாஜி, வீட்டை காலி செய்து பெங்களூரு சென்றது தெரிந்தது.தனிப்படை போலீசார், பெங்களூரு சென்று விசாரித்ததில், அங்குள்ள 'விப்ரோ' நிறுவனத்தில், பிரசன்ன வெங்கடேச பாலாஜி மென்பொறியாளராக பணிபுரிந்து வருவதும், நண்பர்களுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றிருந்ததும் தெரிந்தது.அங்கிருந்து பெங்களூரு திரும்பும் வழியில், கடந்த 24ம் தேதி, கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில், நண்பர்கள் இருவருடன் அவர் பிடிபட்டார்.மூன்று பேரையும், சேலையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், பிரசன்ன வெங்கடேச பாலாஜி, சர்வபொம்மன் உட்பட பலரிடம் 20 கோடி ரூபாய்க்கும் மேல், பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.அவரது நண்பர்கள் மீது புகார்கள் இல்லாததால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.தொடர்ந்து, பிரசன்ன வெங்கடேச பாலாஜியை, நேற்று மாலை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

பொய் புகார்

கடந்தாண்டு, சர்வபொம்மனின் உறவினர்கள் உட்பட 20 பேர், தன் வீடு புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், கார்களையும் கடத்தி சென்றதாக, பிரசன்ன வெங்கடேச பாலாஜி போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, சேலையூர் போலீசார் விசாரித்தனர்.அது தவறான புகார் என தெரிய வந்த நிலையில், தற்போது சர்வபொம்மனின் புகாரின்படி, பிரசன்ன வெங்கடேச பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X