அங்கன்வாடியில் ஆய்வு

Added : ஆக 26, 2022 | |
Advertisement
திருப்பூர்:ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கு, ஊட்டச்சத்து உணவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆறு வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இணை உணவு, ஊட்டசத்து ஆகாரங்கள் வழங்கப்படுகிறது.தமிழக அரசு உத்தரவுப்படி, மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாதது; உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாதது

திருப்பூர்:ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கு, ஊட்டச்சத்து உணவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆறு வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு, இணை உணவு, ஊட்டசத்து ஆகாரங்கள் வழங்கப்படுகிறது.தமிழக அரசு உத்தரவுப்படி, மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாதது; உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாதது என, குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.ஆரோக்ய குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, 'நியூட்ரி கிட்' மற்றும் சிகிச்சை உணவுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள், பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களின் ஆரோக்யம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.திட்டப்பணிகள், அடிப்படை கல்வி, இணை உணவு வழங்கல் குறித்து, அங்கன்வாடி மைய பணியாளர்களிடம், கலெக்டர் கேட்டறிந்தார். உணவு தயாரிப்பு குறித்தும் ஆய்வு செய்து, அறிவுரைகள் வழங்கினார்.*

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X