ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக பலி

Added : ஆக 26, 2022 | |
Advertisement
அம்பாலா-ஹரியானாவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர், அவர்களுடைய வீட்டில் இறந்து கிடந்ததாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அம்பாலா நகருக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். அப்போது அந்த வீட்டில் ஆறு

அம்பாலா-ஹரியானாவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர், அவர்களுடைய வீட்டில் இறந்து கிடந்ததாக போலீசார் நேற்று தெரிவித்தனர்.

ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அம்பாலா நகருக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர்.

அப்போது அந்த வீட்டில் ஆறு பேர் இறந்து கிடந்து உள்ளனர். இறந்தவர்கள் சுக்விந்தர் சிங், அவரது மனைவி, இரு மகள்கள் மற்றும் அவரது பெற்றோர் என அடையாளம் காணப்பட்டனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:சுக்விந்தர், வீட்டின் மின்விசிறியில் துாக்கில் தொங்கியவாறு காணப்பட்ட நிலையில், மற்றவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் சுக்விந்தர் எழுதிய கடிதம் மீட்கப்பட்டது. அதில், 'நான் பணியாற்றிய நிறுவனத்தின் இரண்டு அதிகாரிகள் தங்களுக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என வற்புறுத்தினர். 'என்னால் பணம் தர முடியாததால், குடும்பத்தினரை விஷம் வைத்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொள்கிறேன்' என எழுதப்பட்டிருந்தது.அந்த அதிகாரிகளின் பெயர்களை சுக்விந்தர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X