இந்தோனேஷியாவில் நடக்கிறது'ஆர் 20 மத அமைப்பு மாநாடு

Updated : ஆக 27, 2022 | Added : ஆக 26, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி நகரில், வரும் நவ., 2 மற்றும் 3ம் தேதிகளில், 'ஆர் 20' எனப்படும், மத அமைப்பு மாநாடு நடக்கிறது. அடையாளத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதை தடுப்பது, வகுப்புவாத வெறுப்புகள் பரவுவதை குறைப்பது, பல்வேறு நாடுகள் மற்றும் மக்களின் கலாசாரங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக வைத்து, 'ஆர் 20' என்ற மத அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி நகரில், வரும் நவ., 2 மற்றும் 3ம் தேதிகளில், 'ஆர் 20' எனப்படும், மத அமைப்பு மாநாடு நடக்கிறது.



latest tamil news


அடையாளத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதை தடுப்பது, வகுப்புவாத வெறுப்புகள் பரவுவதை குறைப்பது, பல்வேறு நாடுகள் மற்றும் மக்களின் கலாசாரங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக வைத்து, 'ஆர் 20' என்ற மத அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 'நஹ்தலடுல் உலமா' என்ற இந்தோனேஷியாவைச் சேர்ந்த இஸ்லாமிக் அமைப்பால், இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் மாநாடு, நவ., 2 மற்றும் 3ம் தேதிகளில் இந்தோனேஷியாவின் பாலி நகரில் நடக்கிறது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மத அமைப்புகளின் பிரதிநிதிகள் சிறப்புரையாற்ற உள்ளனர். இந்தியாவிலிருந்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த ராம் மாதவ், ஆர்ச் பிஷப் பெலிக்ஸ் மசோடா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று உரை நிகழ்த்துகின்றனர்.


latest tamil news



இந்தோனேஷியா அதிபர் ஜோகோ விடோடோ, துவக்க உரையாற்றுகிறார். இந்தாண்டு நடக்கவுள்ள மாநாட்டில் வரலாற்று ரீதியிலான குறைகள், உண்மை பேசுதல், நல்லிணக்கம் மற்றும் மன்னிப்பு, பிரச்னைக்குரிய மதபோதனைகள் ஆகிய முக்கிய தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இந்த அமைப்பின் இரண்டாவது மாநாடு இந்தியாவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-202218:15:12 IST Report Abuse
kulandai kannan மதமாற்ற முயற்சிகளை இரு மதங்கள் கைவிட்டாலே, மத வெறுப்பு காணாமல் போய்விடும்.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
27-ஆக-202213:33:47 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan வரவேற்க வேண்டிய விஷயம்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-ஆக-202209:40:26 IST Report Abuse
Sridhar என்ன மகாநாடு நடத்தி என்ன ஆகப்போகிறது? "நான்தான்" "நான்மட்டும்தான்" என்கிற மக்கள் அடிப்படை மனோநிலை மாறாதவரையில், இன்றைய துயரங்கள் தொடரத்தான் செய்யும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X