ஏரி பாசன கால்வாய் ஆக்கிரமிப்புஅகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
திருப்போரூர்:'கொண்டங்கி ஏரி மதகு பாசன கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி அகலப்படுத்த வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர் ஒன்றியம், கொண்டங்கி ஏரி, 650 ஏக்கர் பரப்பு உடையது. இந்த ஏரி, 287.94 மில்லியன் கன அடியையும், 16.11 அடி ஆழத்தையும் கொண்டது.இந்த ஏரி நீரை நம்பி, நெல்லிக்குப்பம், அகரம்,கொண்டங்கி, கீழூர், மேலையூர் உள்ளிட்ட பல கிராமங்களில், 1,500 ஏக்கரில்

திருப்போரூர்:'கொண்டங்கி ஏரி மதகு பாசன கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி அகலப்படுத்த வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் ஒன்றியம், கொண்டங்கி ஏரி, 650 ஏக்கர் பரப்பு உடையது. இந்த ஏரி, 287.94 மில்லியன் கன அடியையும், 16.11 அடி ஆழத்தையும் கொண்டது.இந்த ஏரி நீரை நம்பி, நெல்லிக்குப்பம், அகரம்,கொண்டங்கி, கீழூர், மேலையூர் உள்ளிட்ட பல கிராமங்களில், 1,500 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த ஏரியில் உள்ள மதகு எண் 2, வழியாக செல்லும் பாசன கால்வாய் அகரம், நெல்லிக்குப்பம், கீழூர், தர்மாபுரி உள்ளிட்ட கிராமத்தில்விவசாயம் செய்யப்படுகிறது.இந்நிலையில், பாசன கால்வாய் அகரம் கிராமத்தில் கி.மீ., துாரம் வரை கால்வாய் ஒட்டியுள்ள வீடு, விவசாய நிலம் வைத்திருப்பவர்களால், ஆக்கிரமிக்கப்பட்டு காலவாய் அகலம் குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, கொண்டங்கி ஏரி பாசன தலைவர் கெஜராஜன் கூறியதாவது:கொண்டங்கி ஏரி நீர் பாசன கால்வாய் 10 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளது. சீரமைக்கப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது.அகரம் கிராமத்தில் கால்வாய் அருகே வீடு, விவசாய நிலம் வைத்திருப்பவர்களால் கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு கால்வாய் அளவு சுருங்கி உள்ளது. இதனால், போதிய அளவு பாசன நீர் கிடைப்பதில்லை.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் மெத்தனமாக உள்ளனர்.எனவே, மழைகாலம் வருவதற்குள், கால்வாய் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X