பொருளாதார சூழல் குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசனை

Updated : ஆக 26, 2022 | Added : ஆக 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை :ரிசர்வ் வங்கியின் இயக்குனர்களின், நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ரிசர்வ் வங்கியின் 597வது நிர்வாக குழு கூட்டம், நேற்று, அதன் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலை, உலக மற்றும் உள்நாட்டு சவால்கள், புவிசார் அரசியல்
பொருளாதார சூழல் , ரிசர்வ் வங்கி ,சக்திகாந்த தாஸ் , Economic Environment, Reserve Bank, Shaktikanta Das,

மும்பை :ரிசர்வ் வங்கியின் இயக்குனர்களின், நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ரிசர்வ் வங்கியின் 597வது நிர்வாக குழு கூட்டம், நேற்று, அதன் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலை, உலக மற்றும் உள்நாட்டு சவால்கள், புவிசார் அரசியல் பிரச்னைகள் ஆகியவை குறித்து ஆராயப்பட்டன.


latest tamil news




இந்த கூட்டத்துக்கு, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமை வகித்தார்.இக்கூட்டத்தில், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பிற விஷயங்கள் குறித்தும் ஆராயப்பட்டன என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்ததாக, ரிசர்வ் வங்கியின் அடுத்த பணக் கொள்கை குழு கூட்டம், வரும் செப்டம்பர் 28 - 30 தேதிகளில் நடைபெற உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
27-ஆக-202210:09:47 IST Report Abuse
Rajarajan அரசு ஊழியரின் அடுத்த பஞ்சபடி, ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு, போனஸ், சலுகைகள், சம்பள கமிஷன் ஆகியவற்றின் நிதி சுமையை பத்தி பேசி இருப்பிங்க. உடனே என்ன முடிவு எடுத்திருப்பிங்க ? சாமானிய மக்களுக்கு பொருள் விலை வரி உயர்வு, அதிக வரி சீர்திருத்தம், வங்கி கடனுக்கு அதிக வட்டி, வங்கி சேமிப்புக்கு வட்டி குறைப்பு, சுங்கசாலை நுழைவு வரி உயர்வு இப்படி தானே செய்விங்க. வேற என்ன இருக்க போகுது புதுசா ? காலம் காலமா அரைத்த மாவு, மன்னிக்கவும் புளிச்ச இதே மாவை தானே அரைக்கறிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X