மாமல்லபுரம் கலைச் சின்னங்களை பாதுகாக்க...புதிய தொழில்நுட்பம்!: சிலைகள் மேலும் சிதைவுறுவதை தடுக்கலாம்

Added : ஆக 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மாமல்லபுரம்:''மாமல்லபுரம் பாரம்பரிய சிற்பங்கள் உள்ளிட்ட தொன்மையான கலைச் சின்னங்களை, சிதைவுறா பரிசோதனை தொழில்நுட்பம் வாயிலாக பாதுகாக்க இயலும். மேலும், சிலைகள் சிதைவுறுவதை தடுக்கவும் முடியும்,'' என, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் கூறினார்.ஒரு பொருளை சிதைக்காமல், கதிரியக்க ஊடுருவல் வாயிலாக, உட்புற தன்மையை ஆய்வு செய்ய, சிதைவுறா பரிசோதனை
மாமல்லபுரம் கலைச் சின்னங்களை பாதுகாக்க...புதிய தொழில்நுட்பம்!: சிலைகள் மேலும் சிதைவுறுவதை தடுக்கலாம்

மாமல்லபுரம்:''மாமல்லபுரம் பாரம்பரிய சிற்பங்கள் உள்ளிட்ட தொன்மையான கலைச் சின்னங்களை, சிதைவுறா பரிசோதனை தொழில்நுட்பம் வாயிலாக பாதுகாக்க இயலும். மேலும், சிலைகள் சிதைவுறுவதை தடுக்கவும் முடியும்,'' என, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் கூறினார்.

ஒரு பொருளை சிதைக்காமல், கதிரியக்க ஊடுருவல் வாயிலாக, உட்புற தன்மையை ஆய்வு செய்ய, சிதைவுறா பரிசோதனை தொழில்நுட்பம் பயன்படுகிறது.மருத்துவத்தில், எக்ஸ்ரே உள்ளிட்ட நுட்பத்தில், உள் உடலுறுப்பு உட்புற ஆய்வு, பெட்ரோலியம், எரிவாயு உள்ளிட்ட முக்கிய தொழிலக துறைகளில், குழாய் உட்புற ஆய்வு என, இத்தகைய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.


கருத்தரங்கம்


ஆசிய சிதைவுறா பரிசோதனை சங்கத்தின் இந்திய பிரிவு சார்பில், இந்நுட்ப சர்வதேச கருத்தரங்க மாநாடு, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் துவங்கியது.

இச்சங்க இந்திய பிரிவு தலைவர் மற்றும் கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:இன்றைய வாழ்க்கை முறையில், சிதைவுறா பரிசோதனை தொழில்நுட்பம், நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது.அணுசக்தி, மருத்துவம், பெட்ரோலியம், எரிவாயு உள்ளிட்ட முக்கிய தொழில் துறைகளில், இத் தொழில்நுட்பம் இன்றியமையாதது. எந்த துறையும், இதை தவிர்க்க இயலாது.


விழிப்புணர்வு


இதில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு, இதுபற்றி விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. பழங்கால சிலைகளின் பழமையை அறியவும், இது பயன்படுகிறது.ஆதிச்சநல்லுாரில், தொல்லியல் துறை, அணுசக்தி துறை வாயிலாக, பழமையை கண்டறிகிறது.மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களையும், அதன் சிதைவுறும் தன்மையையும், இந்நுட்பம் வாயிலாக அறிந்து, சிதைவு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, பாதுகாக்கவும் இயலும்.இப்பயிற்சி பெற்றால், உலகில், எங்கும் பணி வாய்ப்பை பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

சிறப்பு விருந்தினரான, பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள் பாதுகாப்பு அமைப்பின், வெடி பொருட்கள் இணை முதன்மை கண்காணிப்பாளர் வேணுகோபால், துவக்கி பேசியதாவது: பெட்ரோலியம், எரிவாயு குழாய்கள், பரவலாக விரவியுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்க, வருங்காலத்தில் ஹைட்ரஜன் வாகனங்களே அதிகரிக்கும். இந்தியன் ஆயில் நிறுவனம், நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் வினியோக நிலையம் அமைத்து, பரிசோதிக்கிறது.சி.என்.ஜி., எல்.பி.,ஜி., உருளைகளை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, வீட்டு எரிவாயு உருளையை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை என, பரிசோதிக்க வேண்டும்.

இச்சூழலில், சிதைவுறா பரிசோதனை தொழில்நுட்பம் அவசியமானது. சங்கத்தில் பயிற்சி பெற்ற 1,500 பொறியாளர்கள் உள்ளனர்.பயிற்சி பெற்றவர்களுக்கு, எங்கள் அமைப்பு சான்றளிக்கும். தொழிலகங்கள் அதிகரிக்கும் நிலையில், இத்தொழில்நுட்ப பணிகளும் அதிகரிக்கின்றன.


கண்காட்சி


நாங்கள் வழங்கும் சான்று, உலக நாடுகளில் பணிபுரிய வாய்ப்பளிக்கும். தற்போதும், வெளிநாடுகளில் ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.மாநாட்டில், 40 சர்வதேச விஞ்ஞானிகள், 320 பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். இத்துறையில் நவீன தொழில்நுட்ப முன்னேற்றம், கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் உள்ளிட்டவை தொடர்பாக கருத்துகள் பகிர்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்திய பிரிவு இயக்குனர் மேனகா, செயல் இயக்குனர் நீயல் கேட்சர், துணை தலைவர் ஜான் இசட் சென், போபால், வி.ஐ.டி., பல்கலைக்கழக துணைவேந்தர் காமாட்சி முதலி உள்ளிட்டோர் பேசினர்.கண்காட்சி அரங்குகள் துவக்கப்பட்டன. இன்றும் மாநாடு நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
27-ஆக-202207:37:32 IST Report Abuse
duruvasar ஏதாவது செய்யுங்கப்பா. இன்னும்ஏகபட்ட நிலங்கள் விற்கமுடியாமல் அப்படியே தேங்கி நிற்கின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X