ஆதாரமில்லாத ரூ.15 ஆயிரம் கோடி: அரசியல் கட்சிகள் மீது குற்றச்சாட்டு

Updated : ஆக 27, 2022 | Added : ஆக 27, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி-தேசிய மற்றும் மாநில கட்சிகள், 2004 - 2005 முதல் 2020 - 2021 வரையிலான நிதியாண்டுகளில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடை வசூலித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் கூறியிருப்பதாவது:பா.ஜ., - காங்., திரிணமுல் காங்., - மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் ஆம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-தேசிய மற்றும் மாநில கட்சிகள், 2004 - 2005 முதல் 2020 - 2021 வரையிலான நிதியாண்டுகளில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடை வசூலித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.



latest tamil news


ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் கூறியிருப்பதாவது:பா.ஜ., - காங்., திரிணமுல் காங்., - மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் ஆம் ஆத்மி, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், தி.மு.க., தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்., உள்ளிட்ட மாநில கட்சிகள், வருமான வரித் துறை, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.


latest tamil news


இதில், 2004 - 2005 முதல் 2020 - 2021 வரையிலான 17 ஆண்டுகளில், இந்த கட்சிகள் தெரியாத நபர்களிடம் இருந்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வசூலித்துள்ளன.கடந்த 2020 - 21 காலகட்டத்தில் காங்கிரஸ் 178 கோடி ரூபாயும், இதே நிதியாண்டில் பா.ஜ., 100 கோடி ரூபாயும் தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடை வசூலித்துள்ளன.

மாநில கட்சிகளுள் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 96 கோடி ரூபாயும், தி.மு.க., 80 கோடி ரூபாயும் தெரியாத நபர்களிடமிருந்து அதிகபட்சமாக வசூலித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஆக-202214:29:26 IST Report Abuse
ஆரூர் ரங் பலர் சரியான புரிதல் இல்லாமல் கருத்துப் பதிவிட்டுள்ளனர். செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது கணக்குக்காட்டிய நிதிதான்.🤔. 20000 ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடைகள் மட்டுமே கட்சிகளால் செக் அல்லது மின்னணு முறையில் வசூலிக்கப்படுகிறது. (பிஜெபி மிகச் சிறிய தொகைகளையும் ஆப் மூலம் பெறுகிறதாம்). மற்ற சிறு தொகைகள் உண்டியல் போன்ற முறைகளில் வசூல் செய்யப்படுவது வழக்கம். அவற்றின் கொடையாளர்களை குறித்து கணக்கு வைக்க சாத்தியமில்லை. முழுக்கவும் வங்கி மூல வசூல் இப்போதைக்கு சாத்தியமில்லை. ஓரிரு ரூபாய் கொடுத்த நபர்களின் பெயர்கள் விலாசம் சேர்த்து கணக்குக் காட்ட வேண்டும் என்றால் பல்லாயிரக்கணக்கான பக்கக் கணக்கு தயார் செய்ய வேண்டியிருக்கும். அவற்றை ஆடிட் செய்வது முடியாத சிக்கலில் முடியும்.
Rate this:
Cancel
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
27-ஆக-202210:25:25 IST Report Abuse
P.Sekaran கட்சி நிதிக்கு வந்த பணம் எல்லாம் கருப்பு பணம்தானே இது அரசு கஜானாவிற்கு செல்ல வேண்டியது. இதை எப்படி சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள். சாதாரண மனிதம் குறைந்த வருமான வரியை கட்டவில்லை என்றால் எவ்வளவு நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை இத்தனை நாள் சும்மா விட்டார்கள் இதில் எல்லா கட்சிகளும் இடம்பெற்றதால்தானே. வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
27-ஆக-202209:48:10 IST Report Abuse
Sampath Kumar இதில் இருந்து என்ன புரிகிறது தேர்தல் நிதி என்ற பெயரில் கருப்பு பணம் வேலை ஆக மற்ற படுகிறது அதனை கட்சிகளும் அய்யோக்கிய சிகாமணிகள் இதுக்கு இந்த நாட்டில் ஜனநாயகம் தேவை இல்லை ராணுவ ஆட்சி வந்தால் தான் இந்த அரசியல் வியாதிகளை தண்டிக்க முடியும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X