ஆதாரமில்லாத ரூ.15 ஆயிரம் கோடி: அரசியல் கட்சிகள் மீது குற்றச்சாட்டு| Dinamalar

ஆதாரமில்லாத ரூ.15 ஆயிரம் கோடி: அரசியல் கட்சிகள் மீது குற்றச்சாட்டு

Updated : ஆக 27, 2022 | Added : ஆக 27, 2022 | கருத்துகள் (6) | |
புதுடில்லி-தேசிய மற்றும் மாநில கட்சிகள், 2004 - 2005 முதல் 2020 - 2021 வரையிலான நிதியாண்டுகளில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடை வசூலித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் கூறியிருப்பதாவது:பா.ஜ., - காங்., திரிணமுல் காங்., - மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் ஆம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-தேசிய மற்றும் மாநில கட்சிகள், 2004 - 2005 முதல் 2020 - 2021 வரையிலான நிதியாண்டுகளில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடை வசூலித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.




latest tamil news


ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் கூறியிருப்பதாவது:பா.ஜ., - காங்., திரிணமுல் காங்., - மார்க்சிஸ்ட் கம்யூ., உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் ஆம் ஆத்மி, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், தி.மு.க., தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்., உள்ளிட்ட மாநில கட்சிகள், வருமான வரித் துறை, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ள கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன.



latest tamil news


இதில், 2004 - 2005 முதல் 2020 - 2021 வரையிலான 17 ஆண்டுகளில், இந்த கட்சிகள் தெரியாத நபர்களிடம் இருந்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை வசூலித்துள்ளன.கடந்த 2020 - 21 காலகட்டத்தில் காங்கிரஸ் 178 கோடி ரூபாயும், இதே நிதியாண்டில் பா.ஜ., 100 கோடி ரூபாயும் தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடை வசூலித்துள்ளன.



மாநில கட்சிகளுள் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 96 கோடி ரூபாயும், தி.மு.க., 80 கோடி ரூபாயும் தெரியாத நபர்களிடமிருந்து அதிகபட்சமாக வசூலித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X