அதுல்ய நாதீஸ்வரர் கோவில் குருக்கள் திடீர் 'சஸ்பெண்ட்'

Added : ஆக 27, 2022 | |
Advertisement
திருக்கோவிலுார்:அரகண்டநல்லுார் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் குருக்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய குருக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம்,அரகண்டநல்லுாரில், அதுல்ய நாதீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 18 ஆண்டுகளாக காசி விஸ்வநாதன் என்ற குருக்கள் பூஜை செய்து வந்தார்.இவர் தவறான
அதுல்ய நாதீஸ்வரர் கோவில் குருக்கள் திடீர் 'சஸ்பெண்ட்'

திருக்கோவிலுார்:அரகண்டநல்லுார் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் குருக்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய குருக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம்,அரகண்டநல்லுாரில், அதுல்ய நாதீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 18 ஆண்டுகளாக காசி விஸ்வநாதன் என்ற குருக்கள் பூஜை செய்து வந்தார்.இவர் தவறான விஷயங்களில் ஈடுபடுவதாக, அரகண்டநல்லுார் நகரைச் சேர்ந்த பலர் அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினர்.

விசாரணையை தொடர்ந்து, காசி விஸ்வநாதன் நேற்று முன்தினம், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டார்.கோவிலை திறந்து வேறு குருக்களிடம் பூஜை பணிகளை ஒப்படைக்க, அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டனர்.அப்போது, காசி விஸ்வநாதனுக்கு ஆதரவாக சிலர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சிறிது நேர பரபரப்புக்கு பின், காசி விஸ்வநாதன், கோவில் சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் குருக்கள் நடராஜன் கூடுதல் பொறுப்பு அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் பூஜை செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X