கோவை பயணம் ரத்து செய்தார் அமித் ஷா!

Updated : ஆக 27, 2022 | Added : ஆக 27, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
கோவையில் நாளை பா.ஜ., அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.,வில் திருச்சி, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், கட்சி அலுவலகம் கட்டப்பட்டு உள்ளன. ஏற்கனவே, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவையில் நாளை பா.ஜ., அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


தமிழக பா.ஜ.,வில் திருச்சி, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், கட்சி அலுவலகம் கட்டப்பட்டு உள்ளன. ஏற்கனவே, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, நாளை கோவையில் கட்சி அலுவலகத்தை, அமித் ஷா நேரடியாக வந்து திறந்து வைக்கவும், அங்கிருந்தபடியே 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மற்ற மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


latest tamil news


அலுவலகம் திறப்பு விழாவுடன், கட்சியின் மையக் குழு கூட்டம், லோக்சபா தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை நடத்தவும், பா.ஜ., திட்டமிட்டிருந்தது. ஆனால், காங்கிரசில் இருந்து ஆசாத் விலகலால் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பு காரணமாக, கோவை நிகழ்ச்சியை அமித் ஷா திடீரென ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
27-ஆக-202209:30:25 IST Report Abuse
duruvasar வந்திருந்தால் ஜி ஸ்கொயர் ஸ்மார்ட் சிட்டியை காண வாய்ப்பிருந்திற்கும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
27-ஆக-202207:28:43 IST Report Abuse
Kasimani Baskaran அமித்ஷாவும் திமுகவின் இணைந்துவிட்டார் என்று திமுக கதைவிட்டாலும் விடும். ஆகவே பயத்தில் அமித்ஷா வரவில்லை - உபிஸ்.
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
27-ஆக-202204:14:59 IST Report Abuse
பிரபு ஆசாத் விலகழுக்கும் அமித் ஷா வருகை ரத்துக்கும் சம்பந்தம் இல்லையே. வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்.
Rate this:
Narayanan Muthu - chennai,இந்தியா
27-ஆக-202210:48:10 IST Report Abuse
Narayanan Muthuஅமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள தொடர்பு. கேக்கறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதும்பானுங்க இவனுங்க. வேறே ஏதாவது உள்குத்தா இருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X