சேலம் செல்லும்பஸ் நிற்பது எங்கே? பயணிகள் குழப்பம்

Added : ஆக 27, 2022 | |
Advertisement
திருப்பூர்:எந்த பஸ் ஸ்டாண்ட்டில் சேலம் பஸ்கள் நிற்கிறது என்பது தெரியாமல், பயணிகள் அவதிப்படுகின்றனர். கடைசி நேரத்தில், பஸ் கிடைக்காமல் அலைமோதுகின்றனர்.திருப்பூர், வளம் பாலம் - யுனிவர்சல் தியேட்டர் சாலையில் பாலம் பணி துவங்குவதால், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயங்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.ஆனால்,

திருப்பூர்:எந்த பஸ் ஸ்டாண்ட்டில் சேலம் பஸ்கள் நிற்கிறது என்பது தெரியாமல், பயணிகள் அவதிப்படுகின்றனர். கடைசி நேரத்தில், பஸ் கிடைக்காமல் அலைமோதுகின்றனர்.திருப்பூர், வளம் பாலம் - யுனிவர்சல் தியேட்டர் சாலையில் பாலம் பணி துவங்குவதால், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயங்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.ஆனால், இதை மதிக்காமல், யுனிவர்சல் தியேட்டர் ரவுண்டானா சந்திப்பில் ஈரோடு பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. அதேநேரம், சேலம் செல்லும் ஒரு சில பஸ்கள், புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து இயக்கப்படுகிறது.ஆனால், பெரும்பாலான பஸ்கள் இரவில் யுனிவர்சல் ரவுண்டானா அருகே நிறுத்தப்படுகிறது. புதிய பஸ் ஸ்டாண்ட் செல்வதில்லை. இதனால், சேலம் பஸ்கள் எந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது என பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.பயணிகள் சிலர் கூறுகையில், ''சேலம் செல்லும் பஸ்கள், ஏதேனும் ஒரு இடத்தில் இருந்து பஸ் இயக்க வேண்டும். இங்கொன்றும், அங்கொன்றுமாக நிறுத்தப்படுவதால், குழப்பம் ஏற்படுகிறது. சில பஸ்கள் யுனிவர்சல் ரவுண்டானாவில் பயணிகளுடன் புறப்பட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று, சேலம் செல்கிது.இதனால், மக்களுக்கு வீண் அலைச்சல், கால விரயமும், போக்குவரத்து துறைக்கு எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது. இது விஷயத்தில் போக்குவரத்து துறையினர், மெத்தன போக்குடன் செயல்படுகின்றனர். எனவே, இது விஷயத்தில் கலெக்டர் தலையிட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X