பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் தகவல் சொல்லாவிட்டால் நடவடிக்கை:மாநகர போலீசார் எச்சரிக்கை

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கோவை:கோவையில், பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக, மாநகர போலீசார் சார்பில்,

கோவை:கோவையில், பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்காத ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகரில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக, மாநகர போலீசார் சார்பில், கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில், போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து தீவிர கண்காணிப்பும், சட்ட நடவடிக்கைகளும், விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், உடையாம்பாளையத்தை சேர்ந்த இரு நபர்கள், ஒரு பள்ளி வளாகத்தின் பின்புறம் அமர்ந்து, கஞ்சா புகைத்துக் கொண்டு இருந்துள்ளனர்.அதனைக்கண்ட மூன்று மாணவர்கள், அவ்விருவர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர். இதில், அவ்விரு நபர்களும், மூன்று மாணவர்களையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், போதைப் பொருட்கள் விற்பனை அல்லது உபயோகம் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிந்தும், போலீசாரிடம் தகவல் தெரிவிக்காத பட்சத்தில், போதைபொருள் விற்பனை மற்றும் நடமாட்டம் போன்ற குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதாக கருதப்பட்டு, பள்ளி தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் மீது, குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X