'நீட்' நுழைவு தேர்வுசெப்., 7ல் 'ரிசல்ட்!'

Added : ஆக 27, 2022 | |
Advertisement
சென்னை:மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான முடிவு, செப்., 7ல் வெளியாக உள்ளது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் வகை மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நடந்தது. நாடு முழுதும், 497 நகரங்கள், வெளிநாட்டில், 14 நகரங்களில், 3,570 தேர்வு மையங்கள்

சென்னை:மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான முடிவு, செப்., 7ல் வெளியாக உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் வகை மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நடந்தது. நாடு முழுதும், 497 நகரங்கள், வெளிநாட்டில், 14 நகரங்களில், 3,570 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.இவற்றில், 18.72 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

தேர்வுக்கான விடைக்குறிப்பு, மாணவர்களின் விடைத்தாள் நகல் ஆகியவற்றை, neet.nta.nic.in என்ற இணையதளத்தில், தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.விடைக்குறிப்பில் ஆட்சேபனை உள்ளவர்கள், வரும் 30ம் தேதிக்குள் உரிய ஆதாரங்களுடன் மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி விடைக்குறிப்பு அடிப்படையில், அனைத்து மாணவர்களுக்குமான தேர்வு முடிவு, மதிப்பெண் மற்றும் 'பெர்சன்டைல்' என்ற சதமான விபரங்கள், செப்., 7ல் வெளியிடப்படும் என்று, தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.இதற்கிடையில், தேர்வு எழுதியுள்ள மாணவரின் 'இ- - மெயில்' முகவரிக்கு, விடைத்தாள் நகல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விடைக்குறிப்பை பார்த்து, தங்களின் மதிப்பெண்ணை கணக்கிட்டு கொள்ள முடியும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X