அரிய பொருட்கள் அணிவகுப்பு: ஆனந்தமோ இரட்டிப்பு!கோவையில் 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி

Added : ஆக 27, 2022 | |
Advertisement
வெளியில் இதமான காலநிலை... உள்ளே மிதமான குளிர்... அரங்கம் முழுவதும் சுகமான வாசனை... வண்ணங்களாலும், வடிவமைப்பாலும் வசீகரிக்கும் பொருட்கள்... மழலைகளை மகிழ்ச்சியில் மிதக்க விடும் விதவிதமான விளையாட்டு அம்சங்கள்... சைவமும் அசைவமுமாக கலந்து கட்டி விருந்து படைக்கும் புட்கோர்ட்... இன்னும் மகிழ்ச்சியான விஷயங்கள் பலப்பல...பொழுது போகாது வீட்டில் தவிப்போர், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்
அரிய பொருட்கள் அணிவகுப்பு: ஆனந்தமோ இரட்டிப்பு!கோவையில் 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி

வெளியில் இதமான காலநிலை... உள்ளே மிதமான குளிர்... அரங்கம் முழுவதும் சுகமான வாசனை... வண்ணங்களாலும், வடிவமைப்பாலும் வசீகரிக்கும் பொருட்கள்... மழலைகளை மகிழ்ச்சியில் மிதக்க விடும் விதவிதமான விளையாட்டு அம்சங்கள்... சைவமும் அசைவமுமாக கலந்து கட்டி விருந்து படைக்கும் புட்கோர்ட்... இன்னும் மகிழ்ச்சியான விஷயங்கள் பலப்பல...பொழுது போகாது வீட்டில் தவிப்போர், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சிக்கு வந்தால் நிச்சயமாக பொழுது போதாது!கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், 'தினமலர்' மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேற்று முன் தினம் துவங்கியது. வேலை நாளாக இருப்பினும் முதல் நாளிலேயே, ஷாப்பிங் ஆர்வலர்கள் பலரும் ஹாயாக வந்து ஜாலியாக ஷாப்பிங் செய்து, மகிழ்வோடு திரும்பினர்.கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக இக்கண்காட்சி இடம்பெறாத நிலையில், மக்களிடம் இருக்கும் 'ஷாப்பிங்' ஆர்வம் வெளிப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று காலை முதலே, மக்கள் அணி அணியாக வரத்துவங்கினர். பரந்து விரிந்த ஏ.சி.,ஹாலில், 'ரிலாக்ஸ்' ஆக வலம் வந்து, ஸ்டால்களில் வந்து குவிந்திருக்கும் புதுப்புது பொருட்களைப் பார்த்துப் பார்த்து 'பர்ச்சேஸ்' செய்தனர்.

புதுவரவு அதிகம்
இந்த ஆண்டு கண்காட்சியில், எக்கச்சக்கமான புதிய வரவுகள் உள்ளன. குறிப்பாக, பெண்களை கவரும் வகையில், சேலை, சுடிதார், பனியன் என அனைத்து வகை ஆடை ரகங்கள், ராஜஸ்தானில் இருந்து பல்வேறு டிசைன்களில் தோலில் தயாரிக்கப்பட்ட ஆண், பெண் என இரு பாலருக்குமான காலணிகள், இளம் மற்றும் நடுத்தர வயதினரைப் பெரிதும் வசீகரிக்கின்றன.பொம்மைக்கார்கள், டெடிபேர் பொம்மைகள், எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் போன்றவை, மிகவும் புதுமையாகவும், அதிநவீனமாகவும் இருப்பதால், குட்டீஸ்கள் குதித்துக் குதித்து அடம் பிடித்து, வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது. இவற்றுடன் அவர்களின் அறிவைத் துாண்டும் சயின்ஸ் பிக்சன் புத்தகங்கள், சின்னச்சின்ன அறிவுசார் விளையாட்டு உபகரணங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.இது போல ஒன்று இரண்டல்ல, நுாறல்ல... பல்லாயிரக்கணக்கான பொருட்கள் விற்பனைக்குக் குவிந்துள்ளன. இவற்றில் பல பொருட்களை, நீங்கள் வேறு எங்கும் தேடித் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது என்பதுதான், இந்த நுகர்வோர் கண்காட்சியின் தனிச்சிறப்பு. இந்த பொருட்கடலுக்குள் உங்களுக்கான முத்துக்களை, நீங்களே தேடிக் கண்டுபிடியுங்கள்.

அதையும் மிஸ் பண்ணாதீங்க!
ஷாப்பிங் செய்வதற்கு நிறைய ஸ்டால்கள் இருப்பதுபோல, 'புக்கிங்' செய்வதற்கும் அங்கே நிறைய ஸ்டால்கள் இருக்கின்றன. வாகன விருப்பத்தையும், இல்லக்கனவையும் ஒரே இடத்தில் நிறைவேற்றும் வகையில், இந்த கண்காட்சியுடன் 'பில்டு எக்ஸ்போ' மற்றும் 'ஆட்டோமொபைல்ஸ் எக்ஸ்போ' என இரண்டு விதமான கண்காட்சிகள் இணைந்து நடத்தப்படுகின்றன.குழந்தைகளை குஷிப்படுத்தி, பெரியவர்களையும் குழந்தைகளைப் போல குதுாகலமாக்கும் ஜக்ளர்ஸ் ஷோ, மேஜிக் ஷோ ஆகியவற்றுடன், ஏர் பலுான், வாட்டர் போட், ஒட்டக சவாரி, பைக் ரைடு, ரயில் பயணம் என ஏராளமான அம்சங்கள், இன்றைய பொழுதை இனிதாக்கக் காத்திருக்கின்றன.கை நிறைய ஷாப்பிங் செய்து, மழலைகளின் மனசு நிறைய விளையாட விட்டு, எல்லோரும் இணைந்து வயிறு நிறைய சாப்பிடுவதற்கு ஏகப்பட்ட வெரைட்டிகள் காட்டும் உணவகங்களும் இருக்கின்றன.சனிக்கிழமையான இன்று...இங்கே வந்தால் உங்களுக்கு இந்த நாள் இனிதாகும். விடுமுறை நாளின் இன்பம் இரட்டிப்பாகும் என்பதற்கு மினிமம் அல்ல... மேக்ஸிமம் கியாரண்டி தருகிறது ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி...வந்து பார்த்தால் நீங்களே இதற்கு சாட்சி!

கண்காட்சியில் இணைந்த கரங்கள்!

கோவை 'தினமலர்' நடத்தும் மெகா 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியை, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் நிறுவனம் இணைந்து நடத்துகிறது. கோ--ஸ்பான்சர்களாக வொண்டர் வுட்ஸ், வுட் ஸ்பார்க், கோவை லட்சுமி மற்றும் அல்ட்ரா நிறுவனங்கள் கரம் கோர்த்துள்ளன. இவர்கள் வாடிக்கையாளர்களை 'வாவ்' என்று விழிவிரிய வைக்கும் வகையில், அதிரடி விலைக்குறைப்பில் பொருட்களை விற்பனை செய்கின்றனர்.லை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை இக்கண்காட்சி நடந்து வருகிறது. வரும் 28ம் தேதி வரை என வார விடுமுறை நாட்களில், ஜாலியாக பொழுதை கழிக்கலாம். ஆறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நபருக்கு, 50 ரூபாய் மட்டுமே நுழைவுக்கட்டணம்.வந்தாச்சு வாகன யோகம்!

பளிச் ஆகும் 100 கார்!

கண்காட்சிக்கு காரில் வருபவர்கள், 'பார்க்கிங்' ஏரியாவில், 5 கே கார் கேர் (5K CAR CARE) நிறுவன கவுன்டரை அணுகினால், உங்கள் காரை 'எக்கோ வாஷ்' செய்து கொடுப்பார்கள். ஒரு சொட்டு தண்ணீரின்றி, இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நுரையையும், உபகரணங்களையும் பயன்படுத்தி, பளிச்சென்று 'வாஷ்' செய்து தருவது பிரமிப்பை ஏற்படுத்தும். தினமும் 100 கார்களுக்கு மட்டுமே இந்த இலவச சேவை!எலக்ட்ரிக் பைக்

கார் டெஸ்ட் டிரைவ்

அசத்தல் 'ஆபர்'
கண்காட்சியில் முத்துாஸ் மருத்துவமனை சார்பில் இலவச எலும்பு அடர்த்தி திறன் பரிசோதனை.

பளிச் ஆகும் 100 கார்!

கண்காட்சிக்கு காரில் வருபவர்கள், 'பார்க்கிங்' ஏரியாவில், 5 கே கார் கேர் (5K CAR CARE) நிறுவன கவுன்டரை அணுகினால், உங்கள் காரை 'எக்கோ வாஷ்' செய்து கொடுப்பார்கள். ஒரு சொட்டு தண்ணீரின்றி, இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நுரையையும், உபகரணங்களையும் பயன்படுத்தி, பளிச்சென்று 'வாஷ்' செய்து தருவது பிரமிப்பை ஏற்படுத்தும். தினமும் 100 கார்களுக்கு மட்டுமே இந்த இலவச சேவை!----பைக், கார் வாங்க வேண்டும் அல்லது பழையதைத் தள்ளி விட்டு புதுசாக வாங்க வேண்டும்; இப்படி இரண்டில் ஒரு விருப்பத்துடன் இருப்பவர்களுக்கு, இந்த கண்காட்சி வாகன யோகத்தை வாரி வழங்குகிறது. நீங்கள் உங்கள் பட்ஜெட்டில் ஏதாவது ஒரு பைக், கார் வாங்க வேண்டுமென்று, ஏதாவது ஒரு நிறுவனத்தின் ஷோ ரூம் போனால், அந்த நிறுவனத்தின் வாகனங்களை மட்டுமே பார்க்க முடியும்.ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியுடன் நடக்கும் 'ஆட்டோமொபைல்ஸ் எக்ஸ்போ'வில், பல்வேறு நிறுவனங்களின் பைக்குகளும், கார்களும் பளிச் என உங்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் என எந்த வகையான வாகனத்தையும், பலவிதமான பட்ஜெட்களில் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்து, 'புக்கிங்' செய்யலாம்.டி.வி.எஸ்., நிறுவனத்தின், ரேசிங் மாடலுடன் அதிக மைலேஜ் தரும் 'ரைடர்', எலக்ட்ரிக் பைக்கான 'ஐ கியூப்' மற்றும் ஸ்கூட்டர் வகை பைக்குகள்; ஆம்பர் நிறுவனத்தின் மூன்று மாடல்களிலான எலக்ட்ரிக் பைக்குகள்; ஒரு முறை சார்ஜ் செய்தால், 120 கி.மீ., பயணிக்கும், 'எவ்ட்ரிக்' நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.வீட்டுத் தேவை, சுமை துாக்கிச்செல்வதற்கான வாகனங்கள் என பயன்பாட்டுக்கு ஏற்ப, கனெக்ட், ஆக்சிஸ், ரைடு மாடல்கள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியில் புக் செய்பவர்களுக்கு ஏராளமான சலுகைகளுடன், எக்சேஞ்ச் ஆபர்கள் மற்றும் 4,000 ரூபாய் வரை கேஷ் பேக் ஆபர்கள், வண்டி புக்கிங் எடுத்தபிறகு கூடுதலாக ரூ.2,500 கேஷ்பேக் போன்ற இன்ப அதிர்ச்சி தரும் ஆபர்களும் கிடைக்கின்றன.முதன் முறையாக கார் வாங்க நினைப்போரும், அடுத்த காருக்கு அப்டேட் செய்ய நினைப்போரும், மாருதி, ஹூண்டாய், கியா, டாடா நிறுவன டீலர்களின் கார்கள் ஒரே இடத்தில் கம்பீரமாக நிற்பதை கண்டு களிக்கலாம். நமக்கு ஏற்ற குறைவான பட்ஜெட்டில் இருந்து 39 லட்சம் ரூபாய் வரை பிடித்தமான காரை, டெஸ்ட் டிரைவ் செய்து புக் செய்யலாம்.மாருதி கார்களுக்கு அதிகபட்சம் 60 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி, ஒரு தங்கக் காசு, எக்சேஞ்ச் போனஸாக 15 ஆயிரம் வரை, தவிர ஜெய்கிருஷ்ணா டிரைவிங் ஸ்கூலில் டிரைவிங் கற்றுக் கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு ஸ்பெஷலாக 2,000 ரூபாய் ரொக்கப்பரிசு காத்திருக்கிறது.ஹூண்டாய் நிறுவனத்தின் 11 வகை கார்களும் இடம் பெற்றுள்ளன.சமீபத்திய ஹாட் வரவான, 6 மற்றும் 7 இருக்கைகள் வசதி கொண்ட 'அல்கசார்' 19.67 லட்சம் ரூபாய் ஆன்ரோடு விலையில் துவங்குகிறது. ஆட்டோ கியர் வசதி கொண்ட, ஹையர் எண்ட் மாடல்களும் உண்டு. கேஷ் ஆபராக 10 ஆயிரம், எக்சேஞ்ச் போனஸ் 10 ஆயிரம், கார்ப்பரேட் ஆபர் 3 ஆயிரம் என, வரிசையாக ஆபர்களை அடுக்குகிறார்கள்.நான்கு சக்கர வாகன சந்தையில் தனக்கென தனியிடத்தைப் பிடித்து வரும் 'கியா' தனது மோஸ்ட் வாண்டட் கேரன்ஸ் ரகத்தைக் களமிறக்கியுள்ளது. இந்த 7 சீட்டர் ரதத்தை, ஷோரூம்களில் புக் செய்தால், 6 மாதம் காத்திருக்க வேண்டும். தினமலர் கண்காட்சியில் அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் டெலிவரி உத்தரவாதம் கொடுக்கிறார்கள்.ஸ்டைலில் கலக்கும் ஸ்கோடாவின் 'குஷார்', 'ஸ்லாவியா' மாடல்கள், பார்ப்போரை பரவசமாக ஈர்க்கின்றன. நான்கு ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு சர்வீஸ் பேக்கேஜ் என்ற அசத்தலான ஆபர் இங்கு கிடைக்கிறது. டாடாவின் அனைத்து மாடல்களுக்கும் 5,000 ரூபாய் ஆக்சசரீஸ் ஆபர் கொடுக்கிறார்கள். எலக்ட்ரிக் கார்களில் டாடாவின் நம்பகத்தன்மை பற்றி தனியே சொல்லத் தேவையில்லை. இங்கு, எலக்ட்ரிக் காரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் டெலிவரி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.ஆக...வண்டி வாங்கும் ஆசையில் இருப்பவர்கள், இங்கே வந்தால் கண்டிப்பாக 'புக்கிங்' செய்யாமல் திரும்பவே மாட்டீர்கள்!பளிச் ஆகும் 100 கார்!

கண்காட்சிக்கு காரில் வருபவர்கள், 'பார்க்கிங்' ஏரியாவில், 5 கே கார் கேர் (5K CAR CARE) நிறுவன கவுன்டரை அணுகினால், உங்கள் காரை 'எக்கோ வாஷ்' செய்து கொடுப்பார்கள். ஒரு சொட்டு தண்ணீரின்றி, இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நுரையையும், உபகரணங்களையும் பயன்படுத்தி, பளிச்சென்று 'வாஷ்' செய்து தருவது பிரமிப்பை ஏற்படுத்தும். தினமும் 100 கார்களுக்கு மட்டுமே இந்த இலவச சேவை!----பைக், கார் வாங்க வேண்டும் அல்லது பழையதைத் தள்ளி விட்டு புதுசாக வாங்க வேண்டும்; இப்படி இரண்டில் ஒரு விருப்பத்துடன் இருப்பவர்களுக்கு, இந்த கண்காட்சி வாகன யோகத்தை வாரி வழங்குகிறது. நீங்கள் உங்கள் பட்ஜெட்டில் ஏதாவது ஒரு பைக், கார் வாங்க வேண்டுமென்று, ஏதாவது ஒரு நிறுவனத்தின் ஷோ ரூம் போனால், அந்த நிறுவனத்தின் வாகனங்களை மட்டுமே பார்க்க முடியும்.ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியுடன் நடக்கும் 'ஆட்டோமொபைல்ஸ் எக்ஸ்போ'வில், பல்வேறு நிறுவனங்களின் பைக்குகளும், கார்களும் பளிச் என உங்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல், எலக்ட்ரிக் என எந்த வகையான வாகனத்தையும், பலவிதமான பட்ஜெட்களில் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்து, 'புக்கிங்' செய்யலாம்.டி.வி.எஸ்., நிறுவனத்தின், ரேசிங் மாடலுடன் அதிக மைலேஜ் தரும் 'ரைடர்', எலக்ட்ரிக் பைக்கான 'ஐ கியூப்' மற்றும் ஸ்கூட்டர் வகை பைக்குகள்; ஆம்பர் நிறுவனத்தின் மூன்று மாடல்களிலான எலக்ட்ரிக் பைக்குகள்; ஒரு முறை சார்ஜ் செய்தால், 120 கி.மீ., பயணிக்கும், 'எவ்ட்ரிக்' நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக்குகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.வீட்டுத் தேவை, சுமை துாக்கிச்செல்வதற்கான வாகனங்கள் என பயன்பாட்டுக்கு ஏற்ப, கனெக்ட், ஆக்சிஸ், ரைடு மாடல்கள் விற்பனைக்கு உள்ளன. இக்கண்காட்சியில் புக் செய்பவர்களுக்கு ஏராளமான சலுகைகளுடன், எக்சேஞ்ச் ஆபர்கள் மற்றும் 4,000 ரூபாய் வரை கேஷ் பேக் ஆபர்கள், வண்டி புக்கிங் எடுத்தபிறகு கூடுதலாக ரூ.2,500 கேஷ்பேக் போன்ற இன்ப அதிர்ச்சி தரும் ஆபர்களும் கிடைக்கின்றன.முதன் முறையாக கார் வாங்க நினைப்போரும், அடுத்த காருக்கு அப்டேட் செய்ய நினைப்போரும், மாருதி, ஹூண்டாய், கியா, டாடா நிறுவன டீலர்களின் கார்கள் ஒரே இடத்தில் கம்பீரமாக நிற்பதை கண்டு களிக்கலாம். நமக்கு ஏற்ற குறைவான பட்ஜெட்டில் இருந்து 39 லட்சம் ரூபாய் வரை பிடித்தமான காரை, டெஸ்ட் டிரைவ் செய்து புக் செய்யலாம்.மாருதி கார்களுக்கு அதிகபட்சம் 60 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி, ஒரு தங்கக் காசு, எக்சேஞ்ச் போனஸாக 15 ஆயிரம் வரை, தவிர ஜெய்கிருஷ்ணா டிரைவிங் ஸ்கூலில் டிரைவிங் கற்றுக் கொண்டவர்களின் குடும்பத்தினருக்கு ஸ்பெஷலாக 2,000 ரூபாய் ரொக்கப்பரிசு காத்திருக்கிறது.ஹூண்டாய் நிறுவனத்தின் 11 வகை கார்களும் இடம் பெற்றுள்ளன.சமீபத்திய ஹாட் வரவான, 6 மற்றும் 7 இருக்கைகள் வசதி கொண்ட 'அல்கசார்' 19.67 லட்சம் ரூபாய் ஆன்ரோடு விலையில் துவங்குகிறது. ஆட்டோ கியர் வசதி கொண்ட, ஹையர் எண்ட் மாடல்களும் உண்டு. கேஷ் ஆபராக 10 ஆயிரம், எக்சேஞ்ச் போனஸ் 10 ஆயிரம், கார்ப்பரேட் ஆபர் 3 ஆயிரம் என, வரிசையாக ஆபர்களை அடுக்குகிறார்கள்.நான்கு சக்கர வாகன சந்தையில் தனக்கென தனியிடத்தைப் பிடித்து வரும் 'கியா' தனது மோஸ்ட் வாண்டட் கேரன்ஸ் ரகத்தைக் களமிறக்கியுள்ளது. இந்த 7 சீட்டர் ரதத்தை, ஷோரூம்களில் புக் செய்தால், 6 மாதம் காத்திருக்க வேண்டும். தினமலர் கண்காட்சியில் அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் டெலிவரி உத்தரவாதம் கொடுக்கிறார்கள்.ஸ்டைலில் கலக்கும் ஸ்கோடாவின் 'குஷார்', 'ஸ்லாவியா' மாடல்கள், பார்ப்போரை பரவசமாக ஈர்க்கின்றன. நான்கு ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு சர்வீஸ் பேக்கேஜ் என்ற அசத்தலான ஆபர் இங்கு கிடைக்கிறது. டாடாவின் அனைத்து மாடல்களுக்கும் 5,000 ரூபாய் ஆக்சசரீஸ் ஆபர் கொடுக்கிறார்கள். எலக்ட்ரிக் கார்களில் டாடாவின் நம்பகத்தன்மை பற்றி தனியே சொல்லத் தேவையில்லை. இங்கு, எலக்ட்ரிக் காரும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் டெலிவரி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.ஆக...வண்டி வாங்கும் ஆசையில் இருப்பவர்கள், இங்கே வந்தால் கண்டிப்பாக 'புக்கிங்' செய்யாமல் திரும்பவே மாட்டீர்கள்!


-நமது நிருபர் குழு-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X