கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு பள்ளி நிர்வாகி உட்பட ஐவருக்கு ஜாமின்

Added : ஆக 27, 2022 | |
Advertisement
சென்னை:கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியைகள் உள்ளிட்ட, ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளிக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, 16, ஜூலை 13ல் மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து, மாணவியின் தாய் அளித்த

சென்னை:கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியைகள் உள்ளிட்ட, ஐந்து பேருக்கு ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளிக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, 16, ஜூலை 13ல் மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து, மாணவியின் தாய் அளித்த புகாரின்படி, வழக்குப்பதிவு செய்த சின்னசேலம் போலீசார், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தற்போது, மாணவி மரண வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் ஐந்து பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஐந்து பேரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், 'எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை; எனவே, ஜாமின் வழங்க வேண்டும்.

ஒரு மாதத்துக்கு மேலாக விசாரணை நடந்து வருவதால், காவலில் வைத்து விசாரிக்க வேண்டியஅவசியமில்லை' என, கூறப்பட்டுள்ளது.இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆஜரான, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, 'ஜிப்மர்' மருத்துவமனை நிபுணர் குழு அறிக்கையை தாக்கல் செய்து, ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, பள்ளி முதல்வர் சிவசங்கரன் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.தங்கசிவன், தாளாளர், செயலர் உள்ளிட்ட நான்கு பேர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் மற்றும் மாணவியின் தாய் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆகியோர் வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளி முதல்வர், தாளாளர் உட்பட ஐந்து பேருக்கும், ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X