'வட்டி செலுத்த வேண்டாம்'

Added : ஆக 27, 2022 | |
Advertisement
சென்னை:'பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்ததற்காக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அபராத வட்டி செலுத்த வேண்டாம்' என கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும் லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அவற்றை நுகர்பொருள் வாணிப கழகம் பல

சென்னை:'பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்ததற்காக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அபராத வட்டி செலுத்த வேண்டாம்' என கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும் லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அவற்றை நுகர்பொருள் வாணிப கழகம் பல நிறுவனங்களிடம் கொள்முதல் செய்து கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளுக்கு வழங்குகிறது.
கூட்டுறவு சங்கங்கள் துவரம் பருப்பு பாமாயிலுக்கான தொகையை முன்கூட்டியே வாணிப கழகத்திற்கு செலுத்துகின்றன. பல சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் அந்த தொகையை தர தாமதம் செய்கின்றன.தாமதமாக வழங்கப்படும் தொகைக்கு அபராத வட்டி வசூலிக்கப்படுகிறது.
ஏற்கனவே சங்கங்கள் நெருக்கடியில் இருப்பதால் வட்டி வசூலிப்பதை கைவிடுமாறு வாணிபக் கழகத்தை வலியுறுத்தி வந்தன.இந்நிலையில் கொள்முதல் செய்த வகையில் வாணிபக் கழகத்திற்கு செலுத்த வேண்டிய அபராத வட்டி தொகையை எக்காரணத்தை முன்னிட்டும் செலுத்த வேண்டாம்' என்று சங்கங்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X