கோவை பயணம் ரத்து செய்தார் அமித்ஷா

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கோவை:கோவையில் நாளை பா.ஜ., அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழக பா.ஜ.,வில் திருச்சி, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், கட்சி அலுவலகம் கட்டப்பட்டு உள்ளன. ஏற்கனவே, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார்.அதைத் தொடர்ந்து, நாளை

கோவை:கோவையில் நாளை பா.ஜ., அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.,வில் திருச்சி, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில், கட்சி அலுவலகம் கட்டப்பட்டு உள்ளன. ஏற்கனவே, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, நாளை கோவையில் கட்சி அலுவலகத்தை, அமித்ஷா நேரடியாக வந்து திறந்து வைக்கவும், அங்கிருந்தபடியே 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மற்ற மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அலுவலகம் திறப்பு விழாவுடன், கட்சியின் மையக் குழு கூட்டம், லோக்சபா தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை நடத்தவும், பா.ஜ., திட்டமிட்டிருந்தது.ஆனால், காங்கிரசில் இருந்து ஆசாத் விலகலால் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பு காரணமாக, கோவை நிகழ்ச்சியை அமித்ஷா திடீரென ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X