கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும்: அழகிரி

Added : ஆக 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை:கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும்'- என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: டில்லியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி தன்னை தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரராக காட்டியிருக்கிறார். திருக்குறளில் ஜி.யு.போப் அளித்த மொழி பெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக போகிற போக்கில் பொய்யான குற்றச்சாட்டை

சென்னை:கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும்'- என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: டில்லியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி தன்னை தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரராக காட்டியிருக்கிறார். திருக்குறளில் ஜி.யு.போப் அளித்த மொழி பெயர்ப்பில் பக்தி என்ற ஆன்மா வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக போகிற போக்கில் பொய்யான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
அவர் தமிழகத்தின் நலன்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை முடக்கும் வகையில் செயல்படுகிறார். இத்தகைய கவர்னர் தமிழகத்துக்கு தேவைதானா?கவர்னர் பெயரளவுக்கான நிர்வாகத் தலைவர் தான். மக்களின் பிரச்னைகள் குறித்துதான் கவர்னர் சிந்திக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆட்சி அமைக்கின்றனர்; மசோதாவை நிறைவேற்றுகின்றனர்.அதை ஆதரிக்காமல் மக்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுவதாலும் வகுப்புவாத சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுவதாலும் அவரை உடனே திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
27-ஆக-202202:40:29 IST Report Abuse
BASKAR TETCHANA அழகிரி உன் திருவாய் மலர்ந்தால் உன் கட்சியில் இருந்து யாராவது பொய் கொண்டே இருக்கின்றனர். பார் இன்று குலாம்நபி ஆஜாத் நாளை யாரோ. எனவே உன் திருவாயை மூடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X