10ம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

Updated : ஆக 27, 2022 | Added : ஆக 27, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு உள்ளதால், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த 28ம் தேதி முதல் ஆக., 10 வரை, மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த 28ம் தேதி நடந்த போட்டியின் துவக்க விழாவுக்கு, பிரதமர் மோடி வந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு உள்ளதால், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



சர்வதேச 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த 28ம் தேதி முதல் ஆக., 10 வரை, மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த 28ம் தேதி நடந்த போட்டியின் துவக்க விழாவுக்கு, பிரதமர் மோடி வந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.இதற்கு மாற்றாக, மேற்கண்ட நான்கு மாவட்டங்களில், இன்று அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் இன்று சி.ஆர்.சி., என்ற பயிற்சி வகுப்புக்கும் வர வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.இதனால், பள்ளிகளில் பாடம் எடுக்க வேண்டுமா; பயிற்சிக்கு வர வேண்டுமா என, ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து, நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது.


latest tamil news




இதையடுத்து, சென்னை முதன்மை கல்வி அலுவலகம், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஆசிரியர் பயிற்சி வகுப்பு உள்ளதால், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு பள்ளிகள் உண்டு எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, முதன்மை கல்வி அலுவலகம் பொது அறிவிப்பு வெளியிடவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
27-ஆக-202210:16:48 IST Report Abuse
Girija அட என்ன ஒரு திட்டமிடல் ? மளிகைகடையில் அண்ணாச்சி பையனை திடீர் திடீர் என்று கூப்பிட்டு எலேய் இந்த ஜாமான பக்கத்து தெரூ ..... வீட்டால குடுத்துட்டு வேகமா வாலே ............... என்பது போல் இருக்கு . எப்படி இருந்தால் என்ன மாதம் ஐம்பதாயிரத்திற்கு குறையாமல் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுக்கு இன்னிக்கு புத்தாக்க பயிற்சி, இன்ப சுற்றுலா .......... இதில் எத்தனை சண்முகம் மற்றும நிர்மலா தேவிக்களோ?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-ஆக-202203:07:48 IST Report Abuse
NicoleThomson திடீரென்று இப்படியெல்லாம் முடிவெடுப்பது அழகள்ள ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X