மின்னல் தாக்கிஒருவர் காயம்

Added : ஆக 27, 2022 | |
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் மின்னல் தாக்கி ஒருவர் காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெண்ணாடத்தில் நேற்று மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பெண்ணாடம், மேலபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 52, நேற்று மாலை 5:30 மணியளவில் வீட்டின் முன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். மின்னல் தாக்கி, அவர் காலில் காயமடைந்தார். உடன்


பெண்ணாடம் : பெண்ணாடத்தில் மின்னல் தாக்கி ஒருவர் காயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பெண்ணாடத்தில் நேற்று மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பெண்ணாடம், மேலபெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 52, நேற்று மாலை 5:30 மணியளவில் வீட்டின் முன் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

மின்னல் தாக்கி, அவர் காலில் காயமடைந்தார். உடன் அவரை அருகிலுள்ளவர்கள் மீட்டு, பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இருவர் மயக்கம்:பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் சின்னையல், 50, வெங்கடேசன் மனைவி சகுந்தலா ஆகியோர் வயலில் நெல் நாற்று தெளிக்கும் போது மின்னல் தாக்கியது. இருவரும் திடீரென வயலில் மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரையும் அருகிலுள்ளவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவங்கள் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X