அடிப்படை வசதி இல்லாமல் அவதி: அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகை

Added : ஆக 27, 2022 | |
Advertisement
பரமத்திவேலுார்,- -அடிப்படை வசதி இல்லாததைக் கண்டித்து, அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரமத்திவேலுாரை அடுத்துள்ள பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பிட வசதி, போதிய அளவு தண்ணீர்

பரமத்திவேலுார்,- -அடிப்படை வசதி இல்லாததைக் கண்டித்து, அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரமத்திவேலுாரை அடுத்துள்ள பாலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பிட வசதி, போதிய அளவு தண்ணீர் வருவதில்லை என்ற புகார் நீண்ட காலமாக உள்ளது. இதுகுறித்து பெற்றோர், பள்ளி தலைமையாசிரியர் பெரியசாமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த, 50க்கும் மேற்பட்ட பெற்றோர், தலைமையாசிரியர் பெரியசாமியை முற்றுகையிட்டு, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யாதது குறித்தும், 12 ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மாற்றாமல் இருப்பது குறித்தும் கேள்வி எழுப்பி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் கோரிக்கைகளை மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தலைமை ஆசிரியர் பெரியசாமி உறுதியளித்தார். இதையடுத்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X