மனைவியை கொலை செய்த கணவன் கோர்ட்டில் சரண்

Added : ஆக 27, 2022 | |
Advertisement
குளித்தலை,- கரூரில், நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, குளித்தலை கோர்ட்டில் சரணடைந்தார். - கரூர் மாநகராட்சி, தான்தோன்றிமலை, என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் செல்வராஜ்; இவரது மனைவி சத்யா; இருவரும் கட்டட தொழிலாளி; இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால், அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம்,


குளித்தலை,- கரூரில், நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, குளித்தலை கோர்ட்டில் சரணடைந்தார். - கரூர் மாநகராட்சி, தான்தோன்றிமலை, என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் செல்வராஜ்; இவரது மனைவி சத்யா; இருவரும் கட்டட தொழிலாளி; இவர்களுக்கு, 2 மகன்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகத்தால், அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சத்யாவிடம், கணவர் செல்வராஜ் மீண்டும் சண்டையிட்டுள்ளார். அப்போது, கத்தியை எடுத்து சத்யாவின் வயிற்றில் குத்தியதில், சத்யா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்த செல்வராஜ், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் தனது மூத்த மகனிடம், சத்யாவை கத்தியால் குத்தி விட்டதாகவும், மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறிவிட்டு தப்பினார். இதையடுத்து, சத்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சத்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிந்து, செல்வராஜை தேடி வந்தனர். நேற்று காலை, குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம், குற்றவியல் நடுவர் எண். 2ல், நீதிபதி பிரகதீஸ்வரன் முன்னிலையில், செல்வராஜ் சரணடைந்தார். அவர், செல்வராஜை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X