'மணல் குவாரி விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை'

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கரூர்-''மணலே இல்லாத இடத்தில், குவாரி அமைக்க பரிந்துரை செய்த, அரசு துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்தார்.கரூர் மாவட்ட விவசாயிகள் மாதாந்திர குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில்

கரூர்-''மணலே இல்லாத இடத்தில், குவாரி அமைக்க பரிந்துரை செய்த, அரசு துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்தார்.கரூர் மாவட்ட விவசாயிகள் மாதாந்திர குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் விபரம் வருமாறு:செல்வராஜ்: குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும்.உதவி செயற்பொறியாளர்: முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, கிடைத்தவுடன் வெளியிடப்படும்.முத்துசாமி: வடகிழக்கு பருவமழை நெருங்குவதால், கால்நடைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.கலெக்டர்: அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான, கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கவனத்துடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.சண்முகம்: அமராவதி ஆற்றில் மீண்டும் நடக்கும், மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். செல்லாண்டிப்பாளையத்தில், தண்ணீர் திருட்டை தடுத்து, ராஜவாய்க்காலை துார்வார வேண்டும்.முகிலன்: காவிரியாற்றில் நன்னியூர் புதுார், மல்லம்பாளையம் பகுதிகளில், மணல் இல்லை. ஆனால், மணல் இருப்பதாக குவாரி அமைக்க, பொதுப்பணித்துறை உள்ளிட்ட, அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும், அந்த இடங்களில் குடிநீர் திட்டப்பணிகள் உள்ளது. எனவே, மணல் குவாரிகள் அமைக்க, பரிந்துரை செய்த அரசு துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து, விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்ட, 84 கோரிக்கை மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பதில் அளித்தனர். குறைதீர் கூட்டத்தில், டி.ஆர்.ஓ., லியாகத், ஆர்.டி.ஓ., ரூபிணா உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X