பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கோபி-பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால், கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு, நேற்று தடை விதிக்கப்பட்டது.பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த, 5ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க, நுழைய தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த, 17ம் தேதி முதல் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம்

கோபி-பவானி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததால், கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு, நேற்று தடை விதிக்கப்பட்டது.பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த, 5ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க, நுழைய தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த, 17ம் தேதி முதல் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு கொடிவேரியில், 29 மி.மீ., மற்றும் பவானி ஆற்றின் வழித்தடத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் தடுப்பணை வழியாக, 1,400 கன அடி தண்ணீர் நேறறு வெளியேறியது. இதனால் கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க தடை விதிக்கப்பட்டது. நீர்வரத்தை பொறுத்து, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X