'வேளாண் படிப்பில்லை; வேறு பள்ளி பாருங்க!' அரசுப்பள்ளி அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கோபி,-''காலாண்டு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், வேறு பள்ளிக்கூடங்களில், உங்கள் குழந்தைகளை சேருங்கள்,'' என்று, கூடக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.நம்பியூர் அருகே கூடக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளி வளாகத்தில்,

கோபி,-''காலாண்டு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், வேறு பள்ளிக்கூடங்களில், உங்கள் குழந்தைகளை சேருங்கள்,'' என்று, கூடக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.நம்பியூர் அருகே கூடக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். பள்ளி வளாகத்தில், 20க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், நேற்று மதியம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இப்பள்ளியில் கடந்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு, நடப்பாண்டில் பிளஸ் 1 வகுப்பில் வேளாண் மற்றும் உயிரியியல் பாடப்பிரிவு இருப்பதாக ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இதனால் எங்கள் பிள்ளைகளை சேர்த்தோம். தற்போது வேளாண் படிப்பு இல்லை; மாற்றுச்சான்றிதழ் வாங்கி செல்லுங்கள் என்கின்றனர். காலாண்டு தேர்வு வந்து விட்ட நிலையில், எந்த பள்ளியில் சேர்ப்பது? எனவே இப்பள்ளியில் வேளாண் படிப்பு தொடர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தகவலறிந்து கடத்துார் போலீசார் சென்றனர். இரு நாட்களுக்கு பின், சம்பந்தப்பட்ட கல்வி துறையினர் மூலம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உறுதியளித்தனர். இதை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X