கடலுார் அரசு மருத்துவமனையில் நோயாளி துாக்கிட்டு தற்கொலை

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கூலித்தொழிலாளி பாத்ரூமில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.கடலுார் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச்சேர்ந்தவர் சங்கர், 53; கூலித்தொழிலாளி. கடந்த 24ம் தேதி ஏற்பட்ட விபத்தில், சங்கருக்கு வலது கை தோல்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். விபத்து குறித்து
கடலுார் அரசு மருத்துவமனையில் நோயாளி துாக்கிட்டு தற்கொலை



கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கூலித்தொழிலாளி பாத்ரூமில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.கடலுார் அடுத்த வழிசோதனைப்பாளையத்தைச்சேர்ந்தவர் சங்கர், 53; கூலித்தொழிலாளி. கடந்த 24ம் தேதி ஏற்பட்ட விபத்தில், சங்கருக்கு வலது கை தோல்பட்டை எலும்பு முறிவு ஏற்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். விபத்து குறித்து முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

மருத்துவமனையில் சங்கருக்கு உதவியாக அவரது மனைவி மஞ்சுளா இருந்தார். சங்கருக்கு இரு நாட்களாக வலி அதிகமாக இருந்தது. சரியான சிகிச்சை அளிக்கவில்லை என, மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு வலி அதிகமாக இருப்பதாக மஞ்சுளாவிடம் கூறிவிட்டு பாத்ரூம் சென்றார். பின்னர் அவர், வெகு நேரம் ஆகியும் வரவில்லை. சந்தேகம் அடைந்த மஞ்சுளா மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். பாத்ரூம் ஜன்னல் கம்பியில் சங்கர் கைலியால் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.கடலுார், புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இறந்த சங்கருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X