பூர்வீக வாரிசுகளுக்கு குடியிருப்பு சான்றிதழ் அரசுக்கு நேரு எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : ஆக 27, 2022 | |
Advertisement
புதுச்சேரி : 'வெளியூர்களில் வசிக்கும் புதுச்சேரி பூர்வீக வாரிசுகளுக்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்' என, சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு வலியுறுத்தினார். சட்டசபையில் 'ஜீரோ' நேரத்தில் அவர் நேற்று பேசியதாவது: புதுச்சேரியில் வேலைவாய்ப்பு இல்லாததால், இந்த மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர்கள் பலர் வெளிமாநிலங்களில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்களின்



புதுச்சேரி : 'வெளியூர்களில் வசிக்கும் புதுச்சேரி பூர்வீக வாரிசுகளுக்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்' என, சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு வலியுறுத்தினார். சட்டசபையில் 'ஜீரோ' நேரத்தில் அவர் நேற்று பேசியதாவது: புதுச்சேரியில் வேலைவாய்ப்பு இல்லாததால், இந்த மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர்கள் பலர் வெளிமாநிலங்களில் தங்கி வேலை செய்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகள், அவர்கள் தங்கியுள்ள ஊரிலேயே படிக்கின்றனர். ஆனால், அவர்களின் ஓட்டுரிமை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் புதுச்சேரியில் உள்ளது.

இருப்பினும், இவர்களுக்கு புதுச்சேரியில் குடியிருப்பு மற்றும் ஜாதி சான்றிதழ் தர மறுக்கப்படுகிறது.இது, நம் மக்களை நாமே புறக்கணிப்பது போல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, புதுச்சேரி பூர்வீக குடிமக்களின் பிள்ளைகளுக்கு குடியுரிமை சான்றிதழை வழங்கிட வேண்டும். அதேபோன்று, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கணவர் இறந்து விட்ட நிலையில் வாழும் விதவை பெண்கள், கணவரை பிரிந்து விவாகரத்து பெற்ற பெண்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்கும் ஜாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

தாலுகா அலுவலகங்களில் பிள்ளைகளுக்கு தந்தை வழி ஜாதி சான்றிதழ் மட்டும் தான் வழங்க முடியும் என்கின்றனர். எனவே, குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்தோ அல்லது இழந்தோ வாழும் பெண்கள், தங்கள் கணவர் வழி சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தாய் வழி ஜாதி சான்றிதழ் வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X