ஆன்லைன் கேரளா லாட்டரி விற்பனை 2 பேர் கைது; இன்னோவா கார் பறிமுதல்

Added : ஆக 27, 2022 | |
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் ஆன்லைன் மூலம் 3 நெம்பர் கேரளா லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் லேப் டாப்களை பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பூதேரி, கோட்டைமேடு முருகர் கோவில் அருகே, ஆன்லைன் கேரளா லாட்டரி விற்கப்படுவதாக நேற்று, போலீசுக்கு தகவல் கிடைத்தது.ஏ.எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், சப்
ஆன்லைன் கேரளா லாட்டரி விற்பனை  2 பேர் கைது; இன்னோவா கார் பறிமுதல்



திண்டிவனம் : திண்டிவனத்தில் ஆன்லைன் மூலம் 3 நெம்பர் கேரளா லாட்டரி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து, 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் லேப் டாப்களை பறிமுதல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பூதேரி, கோட்டைமேடு முருகர் கோவில் அருகே, ஆன்லைன் கேரளா லாட்டரி விற்கப்படுவதாக நேற்று, போலீசுக்கு தகவல் கிடைத்தது.

ஏ.எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசன், சண்முகம், தமிழ்மணி மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதியில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரை சோதனை செய்தனர். அதில், 2 பேர், லேப் டாப்புடன் அமர்ந்திருந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திண்டிவனம் செந்தமிழ் நகரைச் சேர்ந்த சாதிக் பாஷா மகன் ரஹமத்துல்லா, 23; சென்னை, அண்ணா நகர் அய்யனார் மகன் பிரவீன், 19; எனவும், ஆன்லைன் மூலம் 3 நெம்பர் கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, 3 நெம்பர் லாட்டரி கொண்ட பேப்பர், இரண்டு லேப் டாப்கள், 2 மொபைல் போன்கள், 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்னோவா கிரிஸ்ட்டா கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X