கடற்கரை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : ஆக 27, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடற்கரை' என்ற பிரசார நிகழ்வுக்கு, தலைமையேற்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், புதுச்சேரிக்கு வருகிறார். இதனையொட்டி, மத்திய அமைச்சகத்துடன் இணைந்து


புதுச்சேரி : புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடற்கரை' என்ற பிரசார நிகழ்வுக்கு, தலைமையேற்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ், புதுச்சேரிக்கு வருகிறார். இதனையொட்டி, மத்திய அமைச்சகத்துடன் இணைந்து புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இன்று (27ம் தேதி) காலை 6:00 மணிக்கு, நீலக்கொடி சான்றளிக்கப்பட்ட ஈடன் கடற்கரையில், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்து, கடற்கரை பராமரிப்பு ஊழியர்களுடன் கலந்துரையாட உள்ளார். காலை 7:00 மணிக்கு, புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே நடக்கும் கடற்கரை தூய்மைப்படுத்துதல் மற்றும் கடற்கரை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார். இதில், கவர்னர், முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., பங்கேற்கின்றனர்.தொடர்ந்து, 'தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடற்கரை' என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கி, கடற்கரை விழிப்புணர்வு நடைப் பயணம் மற்றும் சைக்கிள் பேரணியை மத்திய அமைச்சர் துவக்கி வைக்கிறார்.மாணவர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கடற்கரையை தூய்மை செய்யும் பணியில்பங்கேற்று, கலந்துரையாட உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X