சின்ன சின்ன செய்திகள்: கரூர்

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கல்லுாரி மாணவி மாயம்தந்தை போலீசில் புகார்கரூர்,-கரூர் வடிவேல் நகரை சேர்ந்தவர், 22 வயது கல்லுாரி மாணவி. இவர், தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில், எம்.எஸ்சி., உயிரியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த, 24ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து,

கல்லுாரி மாணவி மாயம்தந்தை போலீசில் புகார்கரூர்,-கரூர் வடிவேல் நகரை சேர்ந்தவர், 22 வயது கல்லுாரி மாணவி. இவர், தான்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில், எம்.எஸ்சி., உயிரியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த, 24ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மாணவி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து, கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
குட்கா விற்றவர் கைதுகரூர்,-வெள்ளியணை அருகே, குட்கா பொருட்களை விற்றதாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., காசி விஸ்வநாதன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, குட்கா பொருட்களை விற்றதாக, கரூரை சேர்ந்த கருப்புசாமி, 40, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, மூன்று கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து, வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.
நடுநிலை பள்ளியில்வாசிப்பு இயக்கம் துவக்கம்அரவக்குறிச்சி,-அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கான வாசிப்பு இயக்கத்தை, தலைமை ஆசிரியர் சாகுல்ஹமீது துவக்கி வைத்தார்.தமிழக கல்வித்துறை சார்பில், மாணவர்களின் அறிவு பயணத்திற்காக, 'மாணவர்கள் படிக்கலாம்; வெளிநாடு பறக்கலாம்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், பள்ளி நுாலகத்திலிருந்து, மாணவர்களின் வீட்டிற்கு கொண்டு செல்ல புத்தகங்கள் தரப்படுகிறது. மாணவர்கள் அவற்றை படித்து, 'அந்நுால் குறித்து விமர்சனம், ஓவிய நாடகம், கலந்துரையாடல், புத்தகம் தன் கதை கூறுதல்' என, படைப்புகளை மாணவர்கள் சமர்ப்பிப்பதன் மூலம், மாநில அளவில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, 'மாணவர்கள் படிக்கலாம்; வெளிநாடு பறக்கலாம்' என்ற திட்டத்தில், வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறுவர்.நிகழ்ச்சியில், அரசு சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சி பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்து கூறப்பட்டது. புத்தகம் வாசிப்பது குறித்த விழிப்புணர்வு கோஷங்களை மாணவர்கள் எழுப்பி, புத்தக வாசிப்பின் அவசியத்தை வெளிப்படுத்தினர்.
'நம்ம ஊரு சூப்பரு'பணிகள் தீவிரம் அரவக்குறிச்சி,-அரவக்குறிச்சி ஒன்றியத்தில், 'நம்ம ஊரு சூப்பரு' இயக்கம் மூலம் துாய்மை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து, 'நம்ம ஊரு சூப்பரு' என்ற இயக்கம் மாநிலம் முழுவதும் துவங்கி நடந்து வருகிறது. அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட, 20 பஞ்., பகுதிகளில் உள்ள கிராமங்களில், 'நம்ம ஊரு சூப்பரு' என்ற இயக்கத்தை செயல்படுத்த அந்தந்த பஞ்., தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கான பணிகள் நடந்து வரும், கொடையூர் பஞ்., சீத்தப்பட்டி காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அரவக்குறிச்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினார்.
கொசு ஒழிப்பு பணி தீவிரம் கிருஷ்ணராயபுரம்,-கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, மேட்டுத்திருக்காம்புலியூர் பகுதியில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில், அதிகமான கழிவுநீர் வீடுகளில் தேங்கும் போது, கொசுக்கள் உற்பத்தியாகும்.இதை தடுக்கும் வகையில், உறிஞ்சு குழிகள் அமைத்து கழிவுநீர் உறிஞ்சும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழை நீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இப்பணியில், மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்டனர். பணிகளை சுகாதார ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, கிேஷார், சுகாதார குழுவினர் பார்வையிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X