சம்பளம் வராததால் கரூர் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கரூர்,-'சம்பளம் வரவில்லை' எனக்கூறி, கரூர் மாநகராட்சி அலுவலகத்தை, குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்த பணியாளர்கள், நேற்று முற்றுகையிட்டனர்.கரூர் மாநகராட்சியில், குடிநீர் வழங்கல் துறை பிரிவில், 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடப்பு மாத சம்பளம் வழங்கவில்லை என, கூறி ஒப்பந்த பணியாளர்கள், மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் முருகேசன், மாநகர


கரூர்,-'சம்பளம் வரவில்லை' எனக்கூறி, கரூர் மாநகராட்சி அலுவலகத்தை, குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்த பணியாளர்கள், நேற்று முற்றுகையிட்டனர்.கரூர் மாநகராட்சியில், குடிநீர் வழங்கல் துறை பிரிவில், 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள், வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடப்பு மாத சம்பளம் வழங்கவில்லை என, கூறி ஒப்பந்த பணியாளர்கள், மாவட்ட சி.ஐ.டி.யு., செயலாளர் முருகேசன், மாநகர மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி செயலாளரும், கவுன்சிலருமான தண்டபாணி ஆகியோருடன், ஒப்பந்த பணியாளர்கள், கரூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பின், மாநகர நல அலுவலர் லட்சியவர்ணா விடம் நடத்திய பேச்சு வார்த்தையில், இன்று மாலைக்குள் (நேற்று) சம்பளம் ஒப்பந்த பணியாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்த பணியாளர்கள் கலைந்து சென்றனர். இதனால், கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X