தொல்லேகாதுவில் தடுப்பணை கட்ட வேண்டுகோள்

Added : ஆக 27, 2022 | |
Advertisement
பாலக்கோடு,-கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனப்பகுதிகளில் உருவாகும் சின்னாறு தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி,மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தொல்லேகாது உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது.அதேபோல் பெட்டமுகிலாலம் வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீரும் சின்னாற்றில் கலந்து தொல்லேகாது வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. ஆண்டுதோறும்

பாலக்கோடு,-கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனப்பகுதிகளில் உருவாகும் சின்னாறு தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி,மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தொல்லேகாது உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலக்கிறது.அதேபோல் பெட்டமுகிலாலம் வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீரும் சின்னாற்றில் கலந்து தொல்லேகாது வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயத்திற்கும்,குடிநீருக்கும் பயன் இல்லாமல் காவிரி ஆறு வழியாக கடலில் கலக்கிறது.சின்னாறு அணையிலிருந்து ஒகேனக்கல் காவிரி ஆறு வரை, 50 கிலோ மீட்டர் தொலைவிற்கு சின்னாற்றில், ஒரு இடத்தில் கூட தடுப்பணை இல்லாததால், தொல்லேகாது பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கடந்த மாதம் பஞ்சப்பள்ளி சின்னாறு நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் தற்போது சின்னாறு வழியாக காவிரி ஆற்றில் கலந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக பெட்டமுகிலாலம் பகுதியில் மழை பெய்து வருவதால் நேற்று முதல் தொல்லேகாது பகுதியில், 50 அடி உயரத்தில் பாறை இடுக்கு வழியாக தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டி வீணாக காவிரி ஆற்றில் கலக்கிறது.இப்பகுதியில் தமிழக அரசு தடுப்பணை கட்டி நீர் தேக்கி வைத்து பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பாசன வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X